சூப்பரான பூண்டு இறால் செய்வது எப்படி?





சூப்பரான பூண்டு இறால் செய்வது எப்படி?

இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.
சூப்பரான பூண்டு இறால் செய்வது எப்படி?
கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். 

இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப் படுகிறது. 

இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

அனீமியா பிரச்சனை உள்ளவர்களுக்கு, இரும்புச்சத்து நிறைந்த இறால் மீன்கள் கை கொடுத்து உதவுகின்றன. இதிலிருக்கும் கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன்கள் செல்லும். 
அதே போல, கனிமச்சத்து இறாலில் அதிகம் என்பதால், ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.  
இறால் மீனை வளரும் பிள்ளைகளுக்கு தந்து வந்தால், ஞாபக சக்தியை பெருக்க செய்யும். அஸ்டக்ஸாந்த் இந்த இறாலில் நிறைய உள்ளது தான், இந்த ஞாபக சக்திக்கு அடிப்படையான காரணமாகும். 

மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், கண் பார்வை சிதைவிலிருந்து நம்மை காக்கிறது..

தேவையான பொருட்கள் :

இறால் - ½ டீஸ்பூன்

சோள மாவு - 1 டீஸ்பூன்

மிளகு - ½ டீஸ்பூன்

முட்டை - ½

மைதா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 2

மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

தக்காளி காய் - 1 ½ டீஸ்பூன்
வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு !
செய்முறை :
பூண்டு இறால்
ஒரு பாத்திரத்தில் சுத்தப்படுத்தி வைத்துள்ள இறால், மிளகு தூள், உப்பு, முட்டை கரு, மைதா, சோள மாவு இவை அனைத்தும் கலந்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நசுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் விழுது, தேவையான அளவு தக்காளி சாஸ், 

சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின், வறுத்து வைத்துள்ள இறால், மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் பிறகு பரிமாறவும்
புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள் !
குறிப்பு

சப்பாத்தி, சாதம், தயிர் சாதம் ஆகிய வற்றுக்குப் இணை உணவாக இது பொருந்தும்.
Tags: