புரோட்டீன் அதிகம் உள்ள உணவு கொண்டைக்கடலை | Chickpea diet high in protein ! புரோட்டீன் அதிகம் உள்ள உணவு கொண்டைக்கடலை | Chickpea diet high in protein ! - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

புரோட்டீன் அதிகம் உள்ள உணவு கொண்டைக்கடலை | Chickpea diet high in protein !

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. 
புரோட்டீன் கொண்டைக்கடலைஅதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது.

ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். 

அது போல் ஒரு வகை தான் கொண்டைக் கடலை. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள்.

பொதுவாக இதனை வைத்து பூரி மற்றும் சப்பாத்திக்கு சன்னா செய்து சாப்பிடுவோம். ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந் துள்ளன.

கொண்டைக்கடலை சுண்டல்

கடலையை 6 8 மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாய் எண்ணெயில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். 
புரோட்டீன்
இத்துடன் பெருங்காயம் சேர்க்கவும். கறிவேப்பிலை, வெந்த கடலையையும் சேர்த்து வதக்கவும். 

தேங்காய் துருவல் சேர்த்து, ஒரு முறை வதக்கி இறக்கினால் கொண்டைக் கடலை சுண்டல் தயார்.

பயன்கள்

இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

இதில் புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச் சத்து, 

கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந் திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படு வதையும், ரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.

இதை அடிக்கடி செய்து சாப்பிட்டால் மேலும் உடலின் ஆற்றலை அதிகரிக் கப்பதுடன் கொழுப்பும் குறையும்.

இந்த குழம்பு உடல் சோர்வை போக்கும் தன்மை கொண்டது.