வட்டலப்பம் செய்முறை / How Make Vatlappam !





வட்டலப்பம் செய்முறை / How Make Vatlappam !

தேவையானவை:

தேங்காய் பால் - 2 கப் (கெட்டியானது)

முட்டை - 4

சீனி - 200 கிராம்

மஞ்சள்தூள் - சிறிது

பாதம் - 10

முந்திரி - 10

பிஸ்தா - 10

செய்முறை:

முதலில் முட்டையை நன்கு அடித்து வடிகட்டி கொள்ளவும். பாதம், பிஸ்தாவை தோலை நீக்கி வைக்கவும். தேங்காய் பாலில் சீனியை போட்டு நன்கு கலக்கி அதையும் வடிகட்டிக் கொள்ளவும்.
வட்டலப்பம்
5 பாதம், 5 பிஸ்தா, 5 முந்திரியை மிக்ஸியில் போட்டு திறித்துக் கொள்ளவும். மீதி உள்ள பருப்புகளை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பின் முட்டை, தேங்காய் பால் கலவையை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கி மஞ்சள் தூள் , திறித்த பருப்பு களையும் சேர்த்து கலக்கி ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் தடவி அதில் இந்த கலவையை ஊற்றி மூடி போட்டு வைக்கவும்.

ஒரு அகலமான பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த கலவையை வைத்து மேலேயும் ஒரு மூடி போட்டு தீயை மிதமானதாக வைத்து வேகவிடவும்.

கொஞ்சம் வேக ஆரம்பித்ததும் நறுக்கிய பருப்புகளை மேலே தூவி மூடியை போட்டு மூடி விடவும்

வெந்து விட்டதா என்று பார்க்க ஒரு குச்சியை கொண்டு குத்தி பார்க்கவும் வெந்து இருந்தால் குச்சியில் ஒட்டாது அப்பொழுது இறக்கி விடலாம்.

ஆறிய பின்பு துண்டுகள் போட்டு பரிமாறவும்

குறிப்பு :

வடலப்பத்தில் தண்ணீர் இறங்கி விடாமல் கவனமாக மூடியை திறக்கவும், மூடவும் செய்யனும் தண்ணீர் இறங்கினால் நன்றாக இருக்காது.
Tags: