வான்கோழி குழம்பு செய்வது எப்படி?





வான்கோழி குழம்பு செய்வது எப்படி?

வான்கோழி இறைச்சியில் சில முக்கிய ஊட்டச் சத்துக்களும் உள்ளதோடு, சில ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது. வான்கோழி இறைச்சி மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு பிரபலமான உணவு. 
  
வான்கோழி குழம்பு செய்வது எப்படி?

இந்த வான்கோழி இறைச்சியை உறைய வைத்து அதன் மூலம் பாதுகாக்கலாம். 

வான்கோழி இறைச்சியில் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் நேரடியாக இணைக்கப் படவில்லை என்றாலும், அதில் உள்ள செலினியம் புற்றுநோய் எதிர்ப்புப் பண்பை உருவாக்கும் தன்மையை உள்ளடக்கி யுள்ளது. 

வான்கோழியில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது உடல் தசைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக நிரூபிக்கப் பட்டுள்ளது. 

வான்கோழி இறைச்சியும் எளிதில் ஜீரணமாகும் என்பதால், இந்த இறைச்சி வயதானவர்களுக்கு சிறந்ததாக இருக்கலாம்.

வான்கோழி பிரியாணி, வான் கோழி வறுவல் என்று வான் கோழியை பலவாறு சுவைத் திருப்பீர்கள். ஆனால் வான்கோழி குழம்பு செய்து சுவைத்த துண்டா?
வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: 

வான்கோழி - 1/2 கிலோ 

உப்பு - தேவையான அளவு 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

தண்ணீர் - 1 கப் 

மசாலாவிற்கு... 

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் 

வெங்காயம் - 2 (நறுக்கியது) 

தக்காளி - 3 (நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 

மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன் 

சோம்பு பொடி - 2 டீஸ்பூன் 

கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிது 

செய்முறை: 

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

பின் அடுப்பை அணைத்து, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
கிச்சனில் பாத்திரம் கழுவும் தொட்டியை மின்ன வைக்க !
பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,

வான்கோழி குழம்பு
அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து, 15 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும். 

பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் கிளறி, உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடியையும் தூவி கிளற வேண்டும். 

பின்பு அதில் வேக வைத்துள்ள வான்கோழியை நீருடன் ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கி கொத்த மல்லியைத் தூவினால், வான்கோழி குழம்பு ரெடி!
Tags: