இரத்தத்தை விருத்தி செய்யும் பிளம்ஸ் பழம் !





இரத்தத்தை விருத்தி செய்யும் பிளம்ஸ் பழம் !

மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன.
 பிளம்ஸ் பழம்
பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.
சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இவற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் !
இரத்தம் விருத்தி
சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்க வல்லவை. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும். 

வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்த பழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. ·

இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். 

நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினை வாற்றலைத் தூண்டும்.
கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.
பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து நமது உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது. மேலும் ரத்ததில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
 
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பல வகையான உணவுகளை உண்ணும் போது அதனோடு பிளம்ஸ் சேர்த்து சாப்பிட்டால், உடலில் கொழுப்புகள் சேராமல் எடையை கட்டுக்கோப்புடன் வைக்க உதவுகிறது.
Tags: