பிரட் ஆனியன் பொடிமாஸ் செய்வது எப்படி?





பிரட் ஆனியன் பொடிமாஸ் செய்வது எப்படி?

மாலையில் பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு அருமையான சுவையில் 10 நிமிடத்தில் ஏதேனும் செய்து கொடுக்க நினைத்தால், பிரட் ஆனியன் பொடிமாஸ் செய்து கொடுங்கள்.
பிரட் ஆனியன் பொடிமாஸ்
இது நிச்சயம் உங்கள் குழந்தை விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை காலையில் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்: 

பிரட் - 8 துண்டுகள் 

வெங்காயம் - 2 (நறுக்கியது) 

பச்சை மிளகாய் - 2 

கடுகு - 1/2 டீஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

இஞ்சி - 10 கிராம் (பொடியாக நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிது 

மிளகு - 1 டீஸ்பூன் 

சர்க்கரை - 1 டீஸ்பூன்

எலுமிச்சை - 1 

செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, 

பின் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். 

பின் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். 

பின்பு அதில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கி, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி பிரட்டி, கொத்த மல்லியைத் தூவினால், பிரட் ஆனியன் பொடிமாஸ் ரெடி!
Tags: