பொடி மாஸ் செய்முறை / Podi Maas Recipe !





பொடி மாஸ் செய்முறை / Podi Maas Recipe !

தேவையான பொருட்கள்:

கொத்துக் கறி – ¼ கிலோ

கடலைப் பருப்பு – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் - 4

பூண்டு – 5 பல்

இஞ்சி – சிறிது

தாளிக்க:
பட்டை – சிறிதளவு

சோம்பு – சிறிதளவு

உளுந்தம் பருப்பு – சிறிதளவு

துருவிய தேங்காய் – ¼ கோப்பை

எண்ணெய் – தேவை யான அளவு

உப்பு – தேவை யான அளவு

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகிய வற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பொடி மாஸ்
சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகிய வற்றை சேர்த்து வதக்கவும். 

பின் கொத்து கறியையும் நன்கு வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி தேவைக்கு ஏற்ப மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேக விடவும்.

வெந்தவுடன் கடலைப் பருப்பையும், தேங்காய் துரு வலையும் சேர்த்து இறக்கவும். சுவை யான பொடிமாஸ் தயார்.

குறிப்பு:

இதில் முட்டையை அவித்து வெள்ளை கருவை மட்டும் சிறு துண்டு களாக நறுக்கி போடவும்.
Tags: