சுவையான சிக்கன் லெக் ரோஸ்ட் செய்வது எப்படி?





சுவையான சிக்கன் லெக் ரோஸ்ட் செய்வது எப்படி?

அசைவம் பலருக்கும் பிடிக்கும். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன். சிக்கன், மட்டன், மீன் எனப் பல வகைகளை ருசியாக செய்து சாப்பிடுவோம். 
சுவையான சிக்கன் லெக் ரோஸ்ட் செய்வது எப்படி?
இதில் செட்டிநாடு ஸ்பெஷல் என்றால் சொல்லவே வேண்டாம். சுவை அள்ளும். சிக்கனை எப்படி செய்து கொடுத்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

அதிலும் தற்போதைய காலத்தில் சிக்கனை கொண்டு விதவிதமாக புதிய உணவுகளை செய்து அசத்தி வருகிறார்கள்.

ஆனால் சிக்கனை கொண்டு செய்யப்படும் பல பாரம்பரிய உணவு வகைகளும் உள்ளன. உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் சமைப்பீர்களா? வீட்டில் உள்ளோர் சிக்கன் லெக் ரோஸ்ட் செய்து கொடுக்க கேட்பார்களா? 

ஆனால் நீங்கள் செய்யும் சிக்கன் ரோஸ்ட் அவ்வளவு சுவையாக இருக்காதா? அப்படியானால் கீழே கொடுக்கப் பட்டுள்ளவாறு சிக்கன் ரோஸ்ட் செய்யுங்கள். 
இந்த சிக்கன் லெக் ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது ரசம் சாதம் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். 

குறிப்பாக இந்த சிக்கன் லெக் ரோஸ்ட் பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். இதை வீட்டில் நீங்கள் முயற்சித்தால், நல்ல பாராட்டைப் பெறலாம். 

சுவையான சிக்கன் லெக் ரோஸ்ட் செய்வது எப்படி?  எளிய முறையில் செய்வதென்று இதைப் படித்து செய்து சுவைத்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தேவையான பொருட்கள் : 
சிக்கன் லெக்ஸ் – 5

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1/4 ஸ்பூன்

இஞ்சி & பூண்டு விழுது – 1 ஸ்பூன்

 உப்பு – 3/4 ஸ்பூன்

சோம்பு தூள்(விரும்பினால்) – 1 பின்ச்

வெங்காயம் – 2 தக்காளி – 1

கறிவேப்பிலை – சிறிது

எண்ணை (விரும்பினால் தேங்காய் எண்ணை) – 4 ஸ்பூன்

செய்முறை: 
சிக்கன் லெக் ரோஸ்ட்
சிக்கனில் மஞ்சள், மிளகாய், உப்பு, கரம் மசாலா,சோம்பு தூள் மற்றும் இஞ்சி &பூண்டு விழுது சேர்த்து 2 மணி நேரம் ஊற விடவும்.

பின்பு எண்ணையை ஒரு பெரிய கடாயில் காய வைத்து அதில் சிக்கன் கால்களை போட்டு பிரட்டி விடவும் சிறிது நேரத்தில் நீர் விடும் பின்பு நீரை வற்ற வைக்கவும்.
சுமார் 15-20 நிமிடங்களில் சிக்கன் கால்கள் முக்கால் பாகம் வெந்த பின்பு பச்சையாக நறுக்கிய வெங்காயம் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி விடவும்.

நன்கு வற்றி ரோஸ்ட் போல வரும் வரை தீயை குறைத்து பிரட்டி விடவும் சுவையான சிக்கன் லெக் ரோஸ்ட் ரெடி.
Tags: