மணத்தக்காளி இலை பொரித்த குழம்பு செய்வது எப்படி?





மணத்தக்காளி இலை பொரித்த குழம்பு செய்வது எப்படி?

நெல்லிக்காய், பிரண்டை, கற்றாழை போன்றவை மருத்துவ குணம் மிகுந்தவை. அவற்றை நம் மக்கள் உணவிலும் நேரடியாக சேர்த்துக் கொள்கின்றனர்.
மணத்தக்காளி இலை பொரித்த குழம்பு
பல மூலிகைகளை நம் மக்கள் மெனக்கெட்டு வளர்ப்பதில்லை. அவை தாமாகவே படர்ந்து வளரக் கூடியவை. இதில் பிரண்டை, கற்றாழை போன்றவற்றை செடிகளோடு சேர்த்து நம் மக்கள் பிடுங்கி எறிவதும் உண்டு. 

காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளுக்கு மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். 
சிறுநீரக நோய்கள், உடலில் காணப்படும் வீக்கம், மூலநோய், மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு இது தீர்வு தரும். சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில்  பயன்படுத்தலாம். 

அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு.  
மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால்  நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.

தேவையான பொருள்கள்:

நன்கு ஆய்ந்து நறுக்கிய மணத்தக்காளி இலை -  1 கப்

துவரம்பருப்பு  - 50 கிராம்

கடுகு - 1 டீஸ் பூன்

உளுத்தம் பருப்பு -  2 டீஸ் பூன்

எண்ணெய்   -  4 டீஸ் பூன்

மிளகு   - 1 டீஸ் பூன்

பெருங்காயம்  - 1 சிறுதுண்டு

துருவிய தேங்காய்   -  2 டீஸ் பூன்

மஞ்சள் தூள்   - 1 சிட்டிகை

உப்பு  -  தேவைக்கேற்ப
டெங்கு, சிக்குன் குனியா பயப்பட வேண்டாம்?
செய்முறை:
துவரம் பருப்பையும், மணத்தக்காளி கீரையையும் நன்றாகக் கழுவி  குக்கரில் அளவாக தண்ணீர் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து  மூன்று விசில் சத்தம் வரும் வரை வைத்து வேக வைக்கவும்.  

இரண்டு ஸ்பூன் எண்ணையை வாணலியில் விட்டு சூடு படுத்தி அதில் மிளகு, ஒரு டீஸ் பூன் உளுத்தம் பருப்பு பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து, கடைசியில் துருவிய தேங்காயையும் போட்டு ஒருமுறை பிரட்டி எடுக்க வேண்டும்.

வறுத்த சாமான்களை மிக்சியில் நன்றாக அரைத்து வேக வைத்துள்ள பருப்பு கீரை கலவையில் கொட்டி கொதிக்க விட வேண்டும்.

தேவைக் கேற்ப உப்பு போட வேண்டும், எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்து வரும் பொழுது 1 டீஸ்பூன் அரிசிமாவை 4 ஸ்பூன் தணிணீர் விட்டு கரைத்து கொதிக்கும் குழம்பில் விட வேண்டும். 
குதிகால் வலியை விரட்டும் வெந்நீர் !
எல்லாம் ஒன்று சேர்ந்து குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து கடுகு உளுத்தம் பருப்பை தாளித்துக்  கொட்ட வேண்டும். சூடான சாதத்தில் நெய் விட்டு மணத்தக்காளி கீரை பொரித்த குழம்பை பிசைந்து சாப்பிட வேண்டும்.
Tags: