சுவையான சேமியா உப்புமா செய்வது எப்படி?

சுவையான சேமியா உப்புமா செய்வது எப்படி?

உப்புமாவை மாலை வேளைகளில் செய்து வைத்துக் கொண்டால் பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அசத்தலாம்.
சுவையான சேமியா உப்புமா செய்வது எப்படி?
ரவா உப்புமாவிற்குச் சொன்னது போல சேமியாவையும் வறுத்து வைத்துக் கொண்டால் உப்புமா, சேமியா கேசரி, சேமியா பாயசத்தை விரைவில் செய்து விடலாம். 

தினை சேமியா உடனடியாக எனர்ஜியைத் தரும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
நரம்பு மண்டலம் சீராகச் செயல்படும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். கம்பு சேமியா செரிமானப் பிரச்னைகளைப் போக்கும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். எலும்புகளுக்குப் பலம் சேர்க்கும். 

இன்சுலின் சுரப்புச் சீராகும். மெக்னிசியம் இருப்பதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.ரவை, சேமியாவை வறுத்து வைப்பதால் பூச்சிகளும் அண்டாது. 

சரி இனி சேமியா கொண்டு சுவையான சேமியா உப்புமா செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையானவை:

சேமியா – 1 கப்

உப்பு- தேவையான அளவு

மஞ்சள் தூள்- சிறிதளவு

காய்கள்:

பெரிய வெங்காயம்- 1

தக்காளி- 1/2

குடமிளகாய்- 1/2

உருளைக்கிழங்கு-1

காரட்- 1

வேக வைத்தப் பட்டாணி- 1 கப்

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

மிளகாய்வற்றல்- 2

பச்சைமிளகாய்- 1

துருவிய இஞ்சி- 1 துண்டு

கறிவேப்பிலை- 1 இணுக்கு
செய்முறை:
சுவையான சேமியா உப்புமா செய்வது எப்படி?
சேமியாவைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். வேறொரு வாணலியில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு காய்கறிகளையும் (வெங்காயம், பிற காய்கள், தக்காளி) வரிசையில் வதக்கவும்.

ஒரு கப் சேமியாவிற்கு 1 1/2 கப் தண்ணீர் விகிதம் காய்கறிகளுடன் சேர்த்து வேக விடவும். தண்ணீர் கொதித்துக் காய்களும் வெந்ததும் வறுத்த சேமியாவைச் சிறிது சிறிதாகக் கொட்டி அடிப்பிடிக்காமல் கிளறவும்.

ஒரு சில நிமிடங்களிலேயே வெந்த உப்புமாவை எண்ணெய் விட்டுக் கிளறிக் கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
உப்புமாவில் மிளகாய்வற்றல் அல்லது பச்சைமிளகாய் மட்டும் சேர்த்துச் செய்யத் தனிச்சுவை கிட்டும்.
மிளகாய்வற்றல் அல்லது பச்சைமிளகாயைத் தவிர்த்து 1 தேக்கரண்டி சாம்பார் பொடி காய் வேகும் போது சேர்க்க அதுவும் தனிச்சுவை தரும்.

காய்கள் சேர்க்காமல் மஞ்சள் தூள் சேர்க்காமல் வெளீரென்று செய்யும் உப்புமாவிற்கும் ருசி அதிகம்.

காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வதே எப்போதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. உப்புமாவைச் சுடச் சுடச் சாப்பிட இன்னும் ருசி அதிகம்.
Tags: