இந்த கீரை ஆண்மை குறைபாட்டை போக்கும் ! - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

இந்த கீரை ஆண்மை குறைபாட்டை போக்கும் !

பொதுவாக கீரைகள் அதிக சத்துக்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவுப் பொருள். கீரைகளில் பல வகைகள் உள்ளன. 

இந்த கீரை ஆண்மை குறைபாட்டை போக்கும் !

ஒவ்வொன்றும் தனித்துவமான குணங்களுடன், சுவையையும் கொண்டவை. அதில் புளிப்பு சுவைக்கேற்ப பெயரைக் கொண்ட ஓர் கீரை தான் புளிச்ச கீரை. 

ஆந்திராவில் இதை கோங்குரா என்று கூறுவார்கள். உடலில் செல்களில் ஏற்படும் சில மாற்றங்களால் புற்று நோய் ஏற்படுகிறது. 

உடல் எடையை குறைக்கும் 9 வைட்டமின்கள் !

பல வகையான புற்று நோய்கள் இன்று மனித குலத்தை பயமுறுத்துகின்றன. இந்த புற்று நோய் மனிதர்களின் உடலின் பல பாகங்களை பாதிக்கிறது. 

புளிச்ச கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலின் செல்கள் வலுப்பெற்று, புற்று செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களை குறைகிறது.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு தினமும் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலான கீரையை சேர்ப்பது அவசியம். 

அதிலும் புளிச்சக் கீரையை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நினைத்துப் பார்க்க முடியாத அளவிலான நன்மைகளைப் பெறலாம். 

இப்போது புளிச்சக் கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைக் காண்போம்.

மாதவிடாய் 

மாதவிடாய்

மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உதிரத்தடை ஏற்படுதல், 

மாதவிலக்கு தள்ளிப் போதால் போன்றவை ஏற்பட்டு இடுப்பு, அடிவயிறு வலி ஏற்படுகிறது. 

இத்தகைய காலத்தில் பெண்கள் புளிச்ச கீரையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீருகிறது.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

புளிச்ச கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி9 அதிகமாக உள்ளது. முக்கியமாக இதில் வைட்டமின் சி ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. 

இந்த கீரையில் உள்ள ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இது தான் இந்த கீரைக்கு புளிப்பு சுவையைத் தருகிறது. 

நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !

மேலும் இந்த கீரையில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. கூடுதலாக இதில் ஃப்ளேவோனாய்டுகள், புரோட்டீன்கள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகளும் அதிகம் உள்ளது. 

இப்போது இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய புளிச்ச கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.

தோல் வியாதிகள் 

தோல் வியாதிகள்

புளிச்ச கீரை தோல் வியாதிகளுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. புளிச்ச கீரையை நன்றாக மை போல் அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் தடவினாலும், 

அடிக்கடி இக்கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவதாலும் இதில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடண்டுகள் தலைமுடி, தோல் போன்றவற்றின் நலத்தை மேம்படுத்தும்.

எடை இழப்பு

எடை இழப்பு

நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புபவராயின், புளிச்ச கீரையை சாப்பிடுங்கள். புளிச்ச கீரையில் பல வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள், புரோட்டீன்கள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. 

அதோடு இதில் கொழுப்புக்கள் இல்லை மற்றும் கலோரிகளும் குறைவு. ஆகவே இந்த கீரையை எடையைக் குறைக்க நினைப்போர் சாப்பிடுவது நல்லது.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் என்பது உணவில் இருக்கும் தீமையான கொழுப்புகள் உடலில் ரத்தத்தில் படிந்து எதிர் காலத்தில் இதயம் சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது. 

புளிச்ச கீரையில் இத்தகைய கெட்ட கொழுப்புகளை அழிக்கும் சக்தி அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது.

நச்சுக்களை வெளியேற்ற

நச்சுக்களை வெளியேற்ற

புளிச்ச கீரையில் ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பிற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. 

மேலும் இந்த கீரையில் புரோட்டோகாடெக்யூயிக் அமிலம் உள்ளது. இது உடலை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி, உடல் வீக்கத்தை நீக்குகிறது.

கண் பார்வை

கண் பார்வை

பார்வை பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் அன்றாட உணவில் புளிச்ச கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். 

ரோஹைப்னால் மாத்திரை பெண்களே உஷார்

ஏனெனில் இதில் கண் பார்வையை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது.

புற்றுநோய்

புற்றுநோய்

புளிச்ச கீரையில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோய் கட்டிகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் கட்டிகளை தடுக்கிறது. 

ஆனால் புளிச்ச கீரையை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

புளிச்ச கீரைகளில் குளோரோபில் மற்றும் கரோட்டினாய்டுகளுடன் பல வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் உள்ளன. இவை மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் உதவுகின்றன.

ரத்த அழுத்தம் 

ரத்த அழுத்தம்

நாற்பது வயதை நெருங்கியவர்கள் அனைவரும் தங்களின் ரத்த அழுத்த நிலை குறித்த தகவல்களை அறிந்திருப்பது அவசியமாகும். 

புளிச்ச கீரையை சாப்பிடுபவர்களுக்கு உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. 

இறால் திதிப்பு செய்முறை !

மேலும் ரத்த அழுத்தம் அதிகம் ஆகும் போது வரும் இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.

தூக்கமின்மை 

தூக்கமின்மை

உயர் இரத்த அழுத்தம் தான் இரவு நேரத்தில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். புளிச்ச கீரையை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இரத்த அழுத்தம் குறைந்து, தூக்கமின்மை பிரச்சனை நீங்கி, இரவு நேரத்தில் நல்ல தரமான தூக்கத்தைப் பெற உதவும்.

எலும்புகள் வலுவாக

எலும்புகள் வலுவாக

புளிச்ச கீரையில் கால்சியம் அதிகம் உள்ளது. இந்த கீரை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், 

ஃபிஷ் மொய்லி செய்முறை !

குறிப்பாக பெண்கள் உட்கொண்டால், 30 வயதிற்கு பின் எலும்புகள் பலவீனமாவது தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுவோடு இருக்கும்.

ஆண்மை குறை

ஆண்மை குறை

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் புளிச்ச கீரையை சாப்பிடுவது நல்லது. இந்த கீரை ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களின் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கவும் உதவி புரியும். 

அதுவும் புளிச்ச கீரையின் விதைகள் பாலுணர்ச்சியை அதிகரிக்கும். ரத்த அணுக்களின் குறைபாடுகளை சரி செய்கிறது. 

உடலில் இருக்கும் நோய் தோற்றுகளை அழிக்க வல்லது. கண் பார்வையை கூர்மை ஆக்குகிறது. சருமத்துக்கு நல்ல மினுமினுப்பை கொடுக்கும். நரம்புகள் வலு பெற்று ஆண்மை குறைபாட்டை நீக்குகிறது. 

இரத்த சோகை

இரத்த சோகை

பெரும்பாலான பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் இரத்த சோகை வருகிறது. புளிச்ச கீரையில் இரும்புச்சத்து, சோடியம் மற்றும் பாஸ்பரஸ் மற்றும் குளோரோஃபில் வளமான அளவில் உள்ளது. 

முதியவரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொலை செய்த வேலையாள் !

இவை உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் மற்றும் இரத்த சோகை நோயாளிக்கு நன்மை அளிக்கும்.

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

புளிச்ச கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமான ஆரோக்கியம் மேம்பட்டு, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு மற்றும் பிற இரைப்பைக்குடல் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கும். 

புளிச்ச கீரையில் டயட்டரி நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது எளிதில் கழிவுகள் குடலில் நகர்ந்து சென்று வெளியேறச் செய்யும். மேலும் இது உடலில் கொழுப்புக்களின் அளவைக் குறைக்கவும் உதவும்.

நோயெதிர்ப்பு 

நோயெதிர்ப்பு

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் சத்துகள் இயற்கையிலேயே புளிச்ச கீரையில் அதிகம் இருக்கிறது. 

இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் தொற்றி உடலெங்கும் பரவும் நோய் கிருமிகளை அழித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். 

மலேரியா காய்ச்சலுக்கு புதிய மருந்து !

மேலும் பல்வேறு வகையான தொற்று கிருமிகளின் பாதிப்பிலிருந்து உடலை காக்கும் கவசமாக புளிச்ச கீரை செயல்படுகிறது.