பேலியோ அவியல் செய்வது எப்படி?





பேலியோ அவியல் செய்வது எப்படி?

உடல் பருமனைக் குறைக்க உதவும் கோவைக்காயின் வேரில் இத்தகைய பண்புகள் இருப்பதாக ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை சரி செய்கிறது. 
பேலியோ அவியல் செய்வது
செரிமான செயல்முறை நன்றாக இருக்கும் போது, ​​உடல் பருமன் படிப்படியாக குறையத் தொடங்கும். உடலில் இரும்புச் சத்து குறைவதால், நம் உடல் விரைவில் சோர்வடைந்து போவது தெரியும். 

சோர்வுக்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாடு நீங்குவதுடன், உடலில் சோர்வு பிரச்சனையும் நீக்க உதவும். 
இதனுடன், சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.  கோவைக்காய் உடலில் உள்ள ஆற்றல் அளவை அதிகரிக்கிறது, ஏனெனில் இது தியாமின் கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக மாற்ற உதவுகிறது.

என்னென்ன தேவை?

சுரைக்காய் - 200 கிராம்,

கோவைக்காய் - 100 கிராம்,

நீர்ப்பூசணிக்காய் - 100 கிராம்,

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

முருங்கைக்காய் - 100 கிராம் (நறுக்கியது),

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

சேனைக்கிழங்கு - 50 கிராம்,

கறிவேப்பிலை - சிறிது,

உப்பு - தேவைக்கு,

புளிக்காத தயிர் - 200 மி.லி,

சீரகம் - 1 டீஸ்பூன்.

மசாலா அரைக்க...

தேங்காய் - 200 கிராம்,

பச்சைமிளகாய் - 3,

சீரகம் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மசாலா அரைக்க கொடுத்த வற்றை அரைத்து கொள்ளவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு நறுக்கிய சுரைக்காய், முருங்கைக்காய், கோவைக்காய், சேனைக்கிழங்கை போட்டு வதக்கி, 

தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து கலந்து, குக்கருக்கு மாற்றி 1 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த விழுது, வேக வைத்த காய்களைச் சேர்த்து கிளறவும்.
மற்றொரு கடாயில் மீதியுள்ள தேங்காய் எண்ணெயை விட்டு கறிவேப்பிலை, சீரகத்தைத் தாளித்து, காய்கறி கலவையில் கொட்டி கிளறி இறக்கவும். 

ஆறியதும் தயிரை நன்கு அடித்து சேர்க்கவும். தேவையானால் உப்பு சேர்த்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, காலிஃப்ளவர் சாதத்துடன் பரிமாறவும். ஃப்ரிட்ஜில் வைக்காமலும் பரிமாறலாம்.
Tags: