ரவியோலி செய்வது எப்படி? | How to Make Ravioli?





ரவியோலி செய்வது எப்படி? | How to Make Ravioli?

0
தேவையானவை:

* மைதா - கால் கிலோ

* உப்பு - தேவையான அளவு

* ஆலிவ் எண்ணெய் (அ) ஏதேனும் சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

தேவை யானவற்றில் கொடுத்துள்ள அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

பூரணம் செய்ய தேவையானவை:

* பசலைக்கீரை - ஒரு கட்டு

* மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

* பீட்சா சீஸ் (அ) மொசரெல்லா சீஸ் - ஒரு கப்

* பனீர் - கால் கப்

* உப்பு - தேவையான அளவு

* வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

* எண்ணெய் / வெண்ணெய் - தேவையான அளவு

அலங்கரிக்க:

* தக்காளி சாஸ், சில்லி சாஸ் - தேவையான அளவு

* துருவிய சீஸ் - அரை கப்

* க்ரீம் - தேவையான அளவு

செய்முறை:
ரவியோலி செய்வது

பசலைக் கீரையை கழுவி பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் (அ) வெண்ணெயைச் சேர்த்துச் சூடானதும் வெங்காய த்தைச் சேர்த்து வதக்கவும்.

நிறம் மாறியதும் வேக வைத்த பசலைக்கீரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.

இத்துடன் துருவிய பனீர், துருவிய சீஸ் சேர்த்து ஒருமுறை வதக்கி கீழே இறக்கி வைக்கவும்.

பின்னர், பிசைந்து வைத்த மாவை அப்பளம் போல தேய்த்து அதை சதுர வடிவங்களாக வெட்டி வைக்கவும். இதில் பூரணத்தை வைத்து மற்றொரு சதுர வடிவ மாவு துண்டால் மூடவும். 

இனி, சதுரத்தின் ஓரங்களை மைதா பேஸ்ட்டால் ஒட்டவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நிறைய தண்ணீர் விட்டுக் கொதித்த வுடன், ரெடி செய்த ரவியோலி துண்டு களைச் சேர்த்து வேக விடவும்.

ஒரிஜினல் கலர் மாறியுடன் எடுத்து விடவும். அதிக நேரம் வெந்தால் கரைந்து விடும்.

வெந்ததும் தானாக அவை மேல் எழும்பி வரும். திருப்பிப் போட்டு வேக வைக்கத் தேவை யில்லை.

ஒரு பேக்கிங் டிரேயில் எண்ணெய் (அ) வெண்ணெய் தடவி, அதன் மேல் தயாராக ரவியோலி துண்டுகளைப் பரப்பவும்.

அதன் மேல் தக்காளி சாஸ், சில்லி சாஸ் பரப்பி, துருவிய சீஸையும் க்ரீமையும் தூவவும். 

180 டிகிரி உஷ்ணத்தில் அவனில் வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்து வெளியே எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)