ஸ்நாக்ஸ் ராஜ்மா கட்லெட் செய்வது எப்படி?





ஸ்நாக்ஸ் ராஜ்மா கட்லெட் செய்வது எப்படி?

0
ராஜ்மாவுக்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. வயது முதிர்ந்த காலங்களிலும், நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டுமென்றால் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். 
ஸ்நாக்ஸ் ராஜ்மா கட்லெட் செய்வது எப்படி?
ராஜ்மாவில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் அடங்கியுள்ளது. 

உடலின் எடையை குறைக்க ராஜ்மாவில் அடங்கியிருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைக்கிறது. நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்படுத்தும். 
இதன் மூலம் நாம் உண்ணும் உணவின் அளவானது குறையும். இதில் அதிகப் படியான புரதச் சத்து நிறைந்துள்ளதால் நம் உடலில் உள்ள கார்போ ஹைட்ரேட் அளவினை அதிகமாக சேர்க்க விடாமல் தவிர்க்கின்றது. 

இதய ஆரோக்கியத்திற்கு ராஜ்மா சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் நம் இதயத்தை பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். 

இதில் இருக்ககும் கரையக்கூடிய நார்ச்சத்தானது பெருங்குடலில் தாக்கத்தை ஏற்படுத்தி உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைத்து விடும். இதிலுள்ள பொட்டாசியம் சத்தானது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவி செய்கிறது.

தேவையான பொருட்கள் :
ராஜ்மா - 2 கப்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,

கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,

ஓமம் - ஒரு டீஸ்பூன்,

வெங்காயம் - 1

இஞ்சி -பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,

வதக்கிய பெரிய வெள்ளை வெங்காயம் - அரை கப்,

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,

பொடித்த முந்திரி - அரை கப்,

வெள்ளை மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்

புதினா - சிறிதளவு

பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு,
ரெடிமிக்ஸ் கான்கிரீட் பற்றி தெரியுமா? உங்களுக்கு !
செய்முறை :
ஸ்நாக்ஸ் ராஜ்மா கட்லெட் செய்வது எப்படி?
வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்துக் கொள்ளவும்.

வேகவைத்த ராஜ்மாவுடன் உப்பு, மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், ஓமம், இஞ்சி -பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் வெங்காயம், பொடித்த முந்திரி, வெள்ளை மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு, புதினாவைச் சேர்த்துக் கலந்து பிசைந்து, விருப்பமான வடிவில் தட்டி வைக்கவும். 

இதை பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி எடுத்து வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டு களை போட்டு பொரித்து எடுக்கவும். சூப்பரான ராஜ்மா கட்லெட் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)