சாக்லேட் காஜு கத்லி ரெசிபி - Chocolate Kaju Katli Recipe !





சாக்லேட் காஜு கத்லி ரெசிபி - Chocolate Kaju Katli Recipe !

0
பொதுவாக காது கத்லி எல்லோரு க்கும் பிடித்தமானது. இத்துடன் சாக்லேட் சேர்த்து எப்படி சாக்லேட் காஜு கத்லி செய்வது என்று பார்ப்போம்.
சாக்லேட் காஜு கத்லி ரெசிபி

தேவையான பொருட்கள்
டென்ஷன் மனஅழுத்தம் என்பது?
2 1/4 கப் முந்திரி

1 கப் சர்க்கரை

100 மில்லி லிட்டர் தண்ணீர்

1 கப் டார்க் சாக்லேட்

எப்படி செய்வது 

முதலில் முந்திரியை நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அடிகணமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை மிதமான சூட்டில் வைத்திருக் கவும். சர்க்கரை பாகு ஒரு நூல் பதத்திற்கு வரும்வரை அதனை காய்ச்சி, 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும்.

அரைத்து வைத்த முந்திரியை சர்க்கரை பாகுடன் சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை கெட்டியாக வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும்.

அடுப்பை நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஆற வைக்கவும். பின் கைகளில் நெய் தடவி கொண்டு இந்த மாவை மென்மையாக பிசைந்து கொள்ளவும். ஒரு பட்டர் ஷீட்டில் இந்த மாவை வைத்து ரோல் செய்து 5-6 மிமீ வரை உருட்டி கொள்ளவும்.
பார்வையைப் பறிக்கும் நீரிழிவு  !
ஒரு சாஸ்பேனில் ஹீட்ப்ரூஃப் பௌல் வைத்து அதில் சாக்லேட் சேர்த்து உருக்கி கொள்ளவும். சாக்லேட் உருகியதும் காஜூ கத்லி மாவில் இதனை சேர்த்து சமமாக பரப்பி கொள்ளவும்.

ஆறிய பின் இதனை ஃப்ரிட்ஜில் 15-20 நிமிடன்கள் வரை வைக்கவும். பின் இதனை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)