ஸ்வீட் கார்ன் குடை மிளகாய் டோஸ்ட் செய்வது எப்படி?





ஸ்வீட் கார்ன் குடை மிளகாய் டோஸ்ட் செய்வது எப்படி?

0
குடை மிளகாயில் லைகோபீன், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளிட்ட ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை தடுப்பதன் மூலம் நம்முடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. 
ஸ்வீட் கார்ன் குடை மிளகாய் டோஸ்ட்
அதே போல Homocysteine-ன் ஹை லெவல் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. குடை மிளகாய்களில் இருக்கும் ஏராளமான வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் Homocysteine-ன் லெவலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

நீங்கள் குடைமிளகாய்களை ஸ்லைஸ் செய்து அவற்றை அப்படியே பச்சையாகவோ, ரோஸ்ட் செய்தோ, கிரில் செய்தோ அல்லது ஃப்ரை செய்தோ சாப்பிடலாம். 

குடை மிளகாய்களை உங்கள் டயட்டில் சேர்ப்பது குறைத்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். 

குடை மிளகாய்களில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பல அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 

இந்த வைட்டமின்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், நோய் அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

என்னென்ன தேவை?

பிரெட் – 4 துண்டுகள்,

வேகவைத்த ஸ்வீட் கார்ன் – 1 கப்,

நறுக்கிய குடை மிளகாய் – 1,

வெங்காயம் – 1,

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 3,

மல்லித் தழை – 1 கைப்பிடி,

ஒன்றிரண்டாக பொடித்த குறுமிளகு – 10,

துருவிய சீஸ் (mozzarella, parmesan) – 1 கப்,

உப்பு – தேவைக்கு.
எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் ஸ்வீட் கார்ன், குடை மிளகாய், சீஸ், பச்சை மிளகாய், மல்லித் தழை, வெங்காயம், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

தோசைக் கல்லை சூடு செய்து பிரெட்டை போட்டு ஒருபுறம் சூடு செய்து, மற்றொரு பக்கம் திருப்பி மேலே குடை மிளகாய் கலவையை பரப்பி மூடி வைத்து 2 நிமிடம் கழித்து சீஸ் உருகியதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)