அருமையான சீலா மீன் வறுவல் செய்வது எப்படி?





அருமையான சீலா மீன் வறுவல் செய்வது எப்படி?

0
மீன்கள் என்றாலே உடலுக்கு நல்லது தான். அதிலும் ஒமேகா 3 அதிகமுள்ள மீன்கள் அதைவிட நல்லது. அப்படிப்பட்ட மீன் தான் சீலா மீன். ஷீலா மீனை சீலா மீன் என்பார்கள். 
ஷீலா மீன் வறுவல்
ஊளி மீன் என்பார்கள். மாவுலா மீன் என்பார்கள். அதே போல, இந்த ஷீலா மீனிலேயே 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். 

அதே போல, கரைச்சீலா, ஓலைச்சீலா, குழிச்சீலா, இப்படி நிறைய இருக்கிறது. இந்த அனைத்தையும் விட அதிக ருசி தரக்கூடியது நெய் மீன் என்று சொல்லக்கூடிய நெய் ஷீலா மீன்தானாம். 

மிக மிக குறைந்த கலோரிகளும், அளவுக்கு அதிகமான புரதமும் கொண்டது தான் இந்த ஷீலா மீன். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த மீன் பெஸ்ட் சாய்ஸ்.
இதிலுள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு பேருதவி புரிகின்றன. இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மனச்சோர்வு, பதட்டம் நீங்கும்.. 

பிற மனநல கோளாறுகளின் அபாயத்தையும் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சருமத்துக்கும், முடி வளர்ச்சிக்கும் இந்த மீன் மிகவும் நல்லது. 

இதிலுள்ள வைட்டமின் பி 12- நரம்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. ஹை புரோட்டீன் உள்ள மீன் இந்த ஷீலா மீன். ஷீலா மீனின் 3-அவுன்ஸ் சுமார் 22 கிராம் புரோட்டீனை கொண்டிருக்கிறதாம்.
தேவையான‌ பொருட்கள் :

சீலா மீன் - 10 துண்டுகள் 

மிளகாய்த் தூள் - 3-5 தேக்கரண்டி 

இஞ்சி பூண்டு கலவை - 2 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 

தயிர் - 2 தேக்கரண்டி 

எண்ணெய் - 3 தேக்கரண்டி 

எலுமிச்சை - பாதி 

உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். நீரில் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள‌வும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு ஆகிய வற்றைச் சேர்த்து கலைவை செய்து கொள்ளவும். 

இந்த கலவையில் மீன் துண்டுகளை நன்கு கலந்து, ஒரு மணி நேரத்திற்கு ஊற‌ வையுங்கள். இப்போது தவாவில் எண்ணெய் ஊற்றி மீனை (இருபுறமும்) நன்கு பொரித்து எடுக்கவும். 

ஸ்டவ்வை சிம்மில் வைத்து நன்கு வேகும் வரை பொரிக்கவும். ஷீலா மீன் வறுவல் ரெடி. சாதம் அல்லது உங்கள் விருப்பத்தின் படி சேர்த்து சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)