அப்பம் பாலிக் பான் கேக் செய்வது எப்படி?





அப்பம் பாலிக் பான் கேக் செய்வது எப்படி?

0
தற்போது பெரும்பாலானோர் தங்கள் காலை உணவில் பான் கேக்கை சாப்பிட விரும்புகிறார்கள். பொதுவாக இந்த பான் கேக்கை எளிதாக செய்து விடலாம். 
அப்பம் பாலிக் (பான் கேக்)
கோதுமை மாவு அல்லது மைதா மாவு, முட்டை, வெல்லம் அல்லது சர்க்கரை போன்ற எளிமையான உணவு பொருட்கள் மட்டுமே இந்த கேக் செய்ய தேவைப்படுகிறது. 

பொதுவாக அனைவரது வீட்டிலும் வெவ்வேறு முறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனால் நீங்கள் இதில் சில மாற்றங்களை செய்தால் உங்கள் பான் கேக் கூடுதல் ருசியாக இருக்கும்.  

பான் கேக்கின் சீரான தன்மை மற்றும் சுவையை நீங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றால் பால் மற்றும் வினிகரை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக மோர் சேர்க்கலாம். 
மோர் பான் கேக்கிற்கு மென்மையான தன்மையை கொடுக்கும். பால் சேர்த்தால் அதில் இருக்கும் புரதங்கள் உங்கள் கேக்கை கடினமாக்கும். 

எனவே மோர் சேர்ப்பது நல்லது. எனினும் மோர் சேர்த்து கலக்கும் போது கட்டிகள் வந்தால் கலப்பதை நிறுத்துங்கள். பின்னர் அவற்றை நன்கு கரைத்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

மைதா மாவு – ஒன்றரை கப்,

பிரவுன் சுகர் (பழுப்பு சர்க்கரை) – 3 டேபிள் ஸ்பூன்,

பேக்கிங் பவுடர் (அ) பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன்,

இன்ஸ்டன்ட் ஈஸ்ட் – அரை டீஸ்பூன்,

உப்பு – கால் டீஸ்பூன், 

தண்ணீர் – 11/4 கப், 

முட்டை – ஒன்று (விரும்பா தவர்கள் தவிர்க்கலாம்),

வெண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப. 

ஸ்டப்ஃபிங்க்கு: 

கரகரப்பாகப் பொடித்த வேர்க்கடலை – அரை கப், 

க்ரீம் கார்ன் – 1/4 கப், 

பிரவுன் சுகர் – 1/4 கப், 

தேங்காய்த் துருவல், வாழைப்பழம் – விருப்பத்துக்கேற்ப.
செய்முறை:

மைதா மாவுடன் சர்க்கரை, உப்பு, பேக்கிங் பவுடர், ஈஸ்ட் எல்லாம் சேர்த்து நன்கு கலந்து, முட்டை, தண்ணீர் சேர்த்து ஹாண்ட் விஸ்க்கால் கட்டி யில்லாமல் நன்கு அடித்துக் கலக்கி, குறைந்தது ஐந்து மணி நேரம் மூடி ஃப்ரிட்ஜில் வைக்கவும். 

ஓர் இரும்பு தவாவை அடுப்பில் வைத்து, மாவை நன்கு கலக்கி விட்டு ஒரு கரண்டி எடுத்து ஊற்றி மெல்லிய தாக இல்லாமல் மெத்தென்று பரப்பவும். சுற்றியும், மேலும் வெண்ணெய் விடவும். 

மிதமான தீயில் அடி பொன்னிற மாகும் வரை சிவக்க வேக விடவும். மேல் மாவு வெந்ததும், அடியும் சிவந்த நிலையில் இருக்கும் சமயம் பொடித்த வேர்க் கடலையை 

எல்லா இடங்களிலும் இருக்கும் படி மேலே தூவி, க்ரீம் கார்னை ஆங்காங்கே கொஞ்சம் சேர்த்து, சிறிது பிரவுன் சுகர் தூவி அப்படியே மடித்து எடுத்து, இரண்டாகக் கட் செய்து பரிமாறவும். 
இது ஒருவித ஸ்டப்ஃபிங். க்ரீம் கார்ன்-க்கு பதிலாக வேர்க்கடலைப் பொடி மற்றும் சுகர் தூவிய பின், வாழைப்பழத்தை மெல்லிய வட்டங்க ளாக நறுக்கிப் பரவலாக வைத்தும் மடித்து எடுக்கலாம். 

மற்றொரு முறையில், பொடித்த வேர்க்கடலை மற்றும் சர்க்கரை யுடன் தேங்காய்த் துருவலைத் தூவியும் மடித்து எடுக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)