சூப்பரான பிரெட் அடை செய்வது எப்படி?





சூப்பரான பிரெட் அடை செய்வது எப்படி?

0
அடை தோசை ஒரு ஆரோக்கியமான புரதசத்து மிகுந்த காலை உணவு. அரிசி, பருப்பு வகைகள், சிறு தானியங்கள் அகியவற்றை பல விதமான சேர்க்கைகளில் ஊற வைத்து, 
பிரெட் அடை
மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துத் தோசையைப் போல வட்டமாகச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம் அடை... கத்தரிக்காய், வாழைப்பூ, தேங்காய், வெங்காயம் ஆகியவற்றையும் மிகப்பொடியாக அரிந்து, அடையின் மீதுத் தூவிச் சமைப்பர். 

அடை தோசை செய்ய விரும்பும் போது, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மாவை வெளியே எடுத்து, அறை வெப்பநிலை வரும் வரை காத்திருக்கவும். 

எப்போதும் ஒரே போன்ற தோசையைச் செய்து சலித்துப் போனவர்களுக்கு, நிச்சயம் வித்தியாசம் இப்போது அவசியம். அதிலும் சுவையான பிரெட் அடை தோசை நிச்சயம் உங்களை ஏமாற்றி விடாது. 
மெல்லிய, மிருதுவான அமைப்பைக் கொண்டிருக்கும் இந்த பிரெட் அடை தோசை செய்வதும் எளிது. 

மேலும், எளிதில் ஜீரணமாகும் உணவு வகையும் கூட. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பயிறு வகைகளாலான பிரெட் அடை தோசையைச் சுவைத்து மகிழலாம்.

தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 10,

இட்லி அரிசி - 200 கிராம்,

காய்ந்த மிளகாய் - 2,

தக்காளி, வெங்காயம் - தலா 1, 

இஞ்சி - ஒரு சிறிய துண்டு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:

இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து கொள்ளவும். அதனுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பிரெட் சேர்த்து அரைக்கவும். 

இதில் உப்பு சேர்த்துக் கலந்து, அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து, அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

பூண்டு வாசனை பிடிக்கும் என்றால், அரைக்கும் போது இரண்டு பூண்டுப் பல் சேர்க்கலாம்.
ஊறுகாய் அல்லது சட்னி அல்லது சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும். அல்லது அப்படியே வைத்திருங்கள். பலர் வெள்ளை வெண்ணெய் மற்றும் வெல்லத்துடன் சேர்த்தும் சாப்பிடுவார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)