பட்டாணி சீரக‌ ரைஸ் செய்முறை / Pea Cumin Rice Recipe !





பட்டாணி சீரக‌ ரைஸ் செய்முறை / Pea Cumin Rice Recipe !

0
தேவையானவை

பாஸ்மதி ரைஸ் (வேக வைத்தது) - ஒரு கப்

கறிவேப்பிலை - 5

வெங்காயம் - ஒன்று (பெரியது)

பச்சை மிளகாய் - 2-3

பூண்டு - 4

பச்சை பட்டாணி (வேக வைத்தது) - கால் கப்

எண்ணெய் (அல்லது)நெய் - ஒரு மேசைக் கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்த மல்லி - சிறிதளவு

செய்முறை :
பட்டாணி சீரக‌ ரைஸ்
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய வற்றை நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் (அல்லது) நெய் ஊற்றி சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்த பச்சை பட்டாணி, உப்பு போட்டு வதக்கவும்.

வதக்கிய வற்றுடன் வேக வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து மெதுவாக பிரட்டி விட்டு 

அதன் மேல் கொத்த மல்லித் தழையை பொடியாக நறுக்கி போடவும். சுவையான பட்டாணி சீரகம் ரைஸ் ரெடி.பாக்ஸ் இல் வைக்கவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)