நார்த்தங்காய் சாதம் செய்முறை / Nutangai Rice Recipe !





நார்த்தங்காய் சாதம் செய்முறை / Nutangai Rice Recipe !

0
தேவையானவை

அரிசி - 3 கப்

நர்த்தங்காய் - 1 (பெரியது)

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

நிலக்கடலை - 3 மேஜைக் கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 மேஜைக் கரண்டி

வத்தல் மிளகாய் - 4 (சிறியதாக நறுக்கியது)

கறிவேப்பிலை - கைப்பிடியளவு

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை :
 நார்த்தங்காய் சாதம்
அரிசியை வேக வைத்து பின்பு ஆற வைத்துக் கொள்ளவும். பின்பு நார்த்தங காயை எடுத்து, 

அதனை இரண்டாக வெட்டிக் ஒரு பாதிரத்தில் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதனை வடிகட்டி விதைகளை நீக்கவும். நார்த்தங்காய் சாறு தயார். பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். 

அதனுடன் நிலக்கடலை, உழுத்தம் பருப்பு, கடுகு மற்றும் ஜீரகம் சேர்க்கவும். பொன்னிற மாகும் வரை வதக்கவும்.

பின்பு வத்தல் மிளகாய் சேர்க்கவும். பின்பு கறி வேப்பிலை சேர்க்கவும். பின்பு அதனுடன் பெருங்காயம் சேர்க்கவும்.

நிலக்கடலை பொன்னிற மாகும் வரை அவற்றை வதக்கவும். பின்பு அதனுடன் மஞ்சள் தூள் சேர்க்கவும். 

தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு அதனை அடுப்பி லிருந்து இறக்கி கீழே வைக்கவும். 

அதனுடன் நார்த்தங்காய் சாறு சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதனை சாதத்துடன் சேர்த்து நன்கு கிளறவும் நார்த்தங்காய் சாதம் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)