சுவையான ஸ்ட்ராபெர்ரி கேக் செய்வது எப்படி?





சுவையான ஸ்ட்ராபெர்ரி கேக் செய்வது எப்படி?

0
நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும்  நிறைந்திருக்க வேண்டும்.
சுவையான ஸ்ட்ராபெர்ரி கேக் செய்வது எப்படி?
ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ள பழங்களே நமக்கு பெரிதும் உதவுகின்றன.
 
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும்  புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. 

ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை  தடுக்கும் தன்மை சில குறிப்பிட்ட பழங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றன. 
இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும் பாலும் ரத்த  சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். 

உங்கள் குழந்தைகள் கேக் என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு ஆச்சரியம் அளிக்க நினைத்தால், ஒரு சுவையான கேக் ரெசிபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள். 

அதுவும் வீட்டில் பால் பவுடரும், மைதா மாவும் இருந்தால் போதும், ஈஸியாக மில்க் கேக் செய்யலாம். இந்த ஸ்ட்ராபெர்ரி கேக் செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில எளிய பொருட்களே போதுமானது. 
அந்த பொருட்களைக் கொண்டு அற்புதமான சுவையில் ஸ்ட்ராபெர்ரி கேக்கை செய்யலாம். முக்கியமாக இந்த பால் கேக்கை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்தால், உங்கள் குழந்தைகள் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். 

அந்த அளவில் ருசியாக இருக்கும். உங்களுக்கு மில்க் கேக் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள  கொள்ளுங்கள். 

என்னென்ன தேவை?

மைதா - 3/4 கப்

சர்க்கரை - 1/2 கப்

எண்ணெய் - 1/4 கப்

தயிர் - 1/4 கப்

பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

ஸ்ட்ராபெர்ரி - 6

எப்படிச் செய்வது?
சுவையான ஸ்ட்ராபெர்ரி கேக் செய்வது எப்படி?
ஒரு கேக் பான் எடுத்து, அதில் மாவு சிறிது தடவி வைக்கவும். ஜாரில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை எடுத்து நன்றாக மசித்து வைக்கவும். 

பாத்திரத்தில் மைதா மாவு எடுத்து அதனுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். 

ஒரு கிண்ணத்தில் சர்க்கரை தூள் எடுத்து அதில் தயிர், எண்ணெய் ஊற்றி கலந்து பின் மசித்து வைத்துள்ள ஸ்ட்ராபெர்ரி கலவை, மாவு கலவை ஆகிய வற்றை சேர்த்து பீட்டர் கொண்டு நன்கு கலக்கவும்.
தேவை என்றால் சிறிதளவு பிங்க் புட் கலர் சேர்த்து கேக் பானில் ஊற்றி பேக் செய்யவும். 

பின் பேக் செய்யத கேக்கை பாதியாக வெட்டி உங்களுக்கு பிடித்த கிரீமை நடுவில் வைத்து சமமாக பரப்பி மிதமுள்ள கேக்கை எடுத்து அதன் மேலே வைத்து, கேக் முழுவதும் கிரீமை பூசி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)