பன்னீர் ஸ்வீட் கீர் செய்முறை | Paneer Sweet Gheer Recipe !





பன்னீர் ஸ்வீட் கீர் செய்முறை | Paneer Sweet Gheer Recipe !

உங்கள் சுவையை தூண்டும் பன்னீர் ஸ்வீட் கீர் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை 
 பன்னீர் ஸ்வீட் கீர்
அனைவரும் விரும்பும் ருசியான பன்னீர் ஸ்வீட் கீர் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

தேவையானவை

சர்க்கரை - 150 கிராம்

பன்னீர் - 150 கிராம்

பேரீச்சம் பழம் - 6

பால் - ஒரு லிட்டர்

பிஸ்தா - 2 டீஸ்பூன்

முந்திரி, பாதாம் - தலா 6

ஏலக்காய்த் தூள் - 2 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் பாதாம், முந்திரி, பிஸ்தா, பேரீச்சம்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் . 
பின் பன்னீரை சிறு சிறு துண்டு களாகவோ அல்லது துருவியோ வைக்கவும். 

பாலைக் காய்ச்சி, பாதியாக குறுக்கவும். பின் சர்க்கரை, பேரீச்சம்பழம் சேர்க்கவும். 

கொதி வந்தபின் பன்னீர் துண்டுகள் அல்லது துருவல், பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும்.
Tags: