உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்வது எப்படி?





உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்வது எப்படி?

0
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு ஏற்படும், உடல் எடை அதிகரிக்கும் என்றெல்லாம் கூறப்படுகிறது. இதில், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது என்றும் சொல்லப் படுவதுண்டு. 
உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்

ஆனால், உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே வாயு, உடல் எடை அதிகரிப்பு எல்லாம் ஏற்படும். 

உருளைக்கிழங்கில் கார்போ ஹைட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கிறது என்பது உண்மை தான். ஆனால், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உருளைக்கிழங்கில் நிறைந்து காணப்படுகின்றன. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வைட்டமின் சி, உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. அதுபோல, பொட்டாசியமும் அதிகம் உள்ளது. 

இந்த பொட்டாசியம் உண்மையில் இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் தேவையான சத்தாகும். 

அதே போல உருளைக்கிழங்கை வறுத்து சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிட்டால் முழு நன்மையையும் பெற முடியும் என்று கூறுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். 

வயிற்றுப்புண் உள்ளிட்ட வயிற்றுக் கோளாறுகள், குடல், இரைப்பைக் கோளாறுகள் ஆகியவற்றுக்கு உருளைக்கிழங்கு வரப்பிரசாதமாகும். இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவாக உருளைக்கிழங்கு இருக்கிறது. 
உணவில் உருளைக்கிழங்கு வறுவல் இல்லாமல் சாப்பிட மறுக்கும் குழந்தைகளை பார்த்திருக்கலாம். ஆனால், உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற கவலை பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கிறது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக் கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்டை எளிமை யான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.உருளைக் கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்முறை விளக்கம் 
தேவையான பொருட்கள் :

முட்டை – 3

உருளை கிழங்கு – 2

வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை – சிறிதளவு

மிளகு பொடி – ஒரு ஸ்பூன்

மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :
உருளைக் கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அல்லம் ஒன்றும் பாதியாக மசித்து கொள்ளவும். தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முட்டையை உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக நுரை வரும்படி அடித்துக் கொள்ளவும். ஒரு நான்ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் தடவி முட்டையை ஒரு லேயர் ஊற்றவும்.
அதன் மேல் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்த மல்லித் தழை, சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல் இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும். மிதமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேக விடவும். 

மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும். இப்பொழுது பொன்னிற உருளைக் கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி.

குறிப்பு :

உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கி மசாலா சேர்த்து எண்ணெயில் பொரித்தும் சேர்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)