பேபி கார்ன் - மேத்தி கிரேவி செய்முறை | Baby Corn - Medieval Grape Recipe !





பேபி கார்ன் - மேத்தி கிரேவி செய்முறை | Baby Corn - Medieval Grape Recipe !

தேவையான பொருட்கள் :
பேபி கார்ன் - 10,

வெந்தயக்கீரை - கால் கப்,

முந்திரிப் பருப்பு - 5,

வெங்காயம் - 1,

தக்காளி - ஒன்று,

சர்க்கரை அல்லது தேன் - ஒரு டீஸ்பூன்,

ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்,

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்,

கரம் மசாலாத் தூள் - கால் டீஸ்பூன்,

ஏலக்காய் - ஒன்று,

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
பேபி கார்ன் - மேத்தி கிரேவி
வெந்தயக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். 

பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, ஆறிய வுடன் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு ஏலக்காய் சேர்த்து, அரைத்த விழுதைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். 

இதனுடன்  மிளகாய்த் தூள், உப்பு, கரம் மசாலாத் தூள் சேர்க்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெந்தய கீரை சேர்த்து வதக்கவும். இதில் வேக வைத்த பேபி கார்ன், சர்க்கரை (அ) தேன் சேர்க்கவும்.

அடுத்து அதில் தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். 

 கடைசியாக ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கவும். சூப்பரான பேபி கார்ன் - மேத்தி கிரேவி ரெடி.
Tags: