கேரளா ஸ்டைல் மீன் வறுவல் செய்வது எப்படி?





கேரளா ஸ்டைல் மீன் வறுவல் செய்வது எப்படி?

பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். சில உணவு பொருட்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
கேரளா ஸ்டைல் மீன் வறுவல் செய்வது எப்படி?
பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

தவிர, மட்டன், சிக்கன்போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம். சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். 

பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில் சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக இருக்கிறது. 
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும் என தெரிய வந்துள்ளது. 

சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 
மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது, வாரத்திற்கு ஒரு முறையாவது உணவுடன் மீனை சேர்த்து கொள்வது நல்லது.

தேவையானவை: 

மத்தி மீன் (sardine) - 1 கிலோ 

மிளகு - 2 தேக்கரண்டி 

சீரகம் - 2 தேக்கரண்டி 

சோம்பு - 1 தேக்கரண்டி 

இஞ்சி-1 இன்ச் நீளம் 

பூண்டு - 20 பல் 

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி 
தயிர் - 1 தேக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 200 மில்லி 
செய்முறை: 

கேரளா ஸ்டைல் மீன் வறுவல்

மீனை நன்கு சுத்தம் செய்யவும். மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். 

பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, தயிர் + உப்பு போட்டு நன்கு கலந்து, அதனை கழுவிய மீனில் நன்கு தடவி வைக்கவும். 
தேவை யானால் மஞ்சள் பொடி சேர்க்கலாம். இதனை குளிர் சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும். 3 -4 மணி நேரம் வைக்கலாம். அதன்பின், அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாதி எண்ணெய் ஊற்றி சூடானதும், 

மசாலா பிசறிய மீனை மெதுவாக அடுக்கி வைத்து, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அதனை கொஞ்ச நேரம் கழித்து, மீன் உடைந்து விடாமல் மெதுவாக புரட்டி விடவும். 

எண்ணெய் போத வில்லை என்றால் ஊற்றவும். அடுத்த பக்கமும் வெந்ததும், மீனை உடையாமல் புரட்டவும். இரு பக்கமும் மீன் மொறு மொறு என வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து கறிவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும். 

இந்த வறுத்த மத்தி மீனை எந்த குழம்பு சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். இதில் ஏராளமான ஒமேகா- 3 – கொழுப்பு அமிலம் உள்ளது. மத்தியின் சுவை, கடல் மீன்களில் தனித்து வமானது..!
Tags: