ஊட்டி ஸ்பெஷல் வர்க்கி செய்முறை / Ooti Special Varki Recipe !





ஊட்டி ஸ்பெஷல் வர்க்கி செய்முறை / Ooti Special Varki Recipe !

தேவையான பொருள்கள்

மைதா - 2 கப்

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

டால்டா - கால் கப்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - ஒரு டீஸ்பூன்

ஈஸ்ட் - இரண்டு சிட்டிகை (ஃப்ரெஷ் ஈஸ்ட்)
தண்ணீர் - தேவை யான அளவு.

செய்முறை


மைதாவை ஈஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு இளக்க மான மாவாகப் பிசைந்து ஓர் இரவு முழுதும் ஈரத்துணி போட்டு ஊற விடவும்.

மறு நாள் அந்த மாவை நன்கு பிசையவும். டால்டா, எண்ணெய், நெய், உப்பு, சர்க்க ரையை அடுப்பில் வைத்து 

கரையும் வரை சூடு செய்து மாவில் ஊற்றி பிசையவும். மாவு, எண்ணெய் களை இழுத்து நன்கு நீண்டு வரும். 

மிருது வான தன்மை வரும் வரை பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது டால்டா சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு இன்ச் தடிமனுள்ள சப்பாத்தி போல திரட்டி ஒன்றரை இன்ச் அகலத்தில் மாவை குறுக்கு வெட்டாக வெட்டவும்.

அதனை விரல்க ளால் சுருட்டி இறுதியில் எதிர் திசையில் மடித்தால் வர்க்கியின் மடிப்பு வரும்.

அவனை (Oven) அதன் அதிக பட்ச வெப்பத் தில் 10 நிமிடம் சூடாக்கவும். 

இருபுறமும் சூடாவது போல செட்டிங் மாற்றி, 180 டிகிரியில் 20 முதல் 30 நிமிடம் வேக விடவும்.

வெந்ததும் சிறிது ஆற விட்டு, காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்க லாம்.
Tags: