நாக்கில் சுவையூற வைக்கும் கல்கண்டு சோறு செய்முறை !





நாக்கில் சுவையூற வைக்கும் கல்கண்டு சோறு செய்முறை !

இனிப்புப் பொருட்களில் கல்கண்டுக்குத் தனிச்சுவையுண்டு கல்கண்டு சோறு எனும் போதே உங்கள் நாக்கில் எச்சில் ஊறுவதை உணர்கிறேன். 
கல்கண்டு சோறு
இதோ கல்கண்டு சோறின் செய்முறை 

தேவையான பொருள் :

கல்கண்டு – அரைகிலோ

பச்சை அரிசி – 200 கிராம்

பாசிபருப்பு – 50 கிராம்

முந்திப் பருப்புகள் – 10

ஏலக்காய் – 5

செய்முறை :

முதலில் ஐம்பது கிராம் பாசிப்பருப்பை எடுத்து பதமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

முத்தமா அசுத்தமா? பேசும் அன்பு மொழி முத்தம் !

பின்னர் 200 கிராம் பச்சை அரிசியை தூய்மையான தண்ணீரை விட்டு நன்றாகக் கழுவிக்களைந்து வடிகட்டிக் கொள்ளவேண்டும்.

பிறகு பருப்பையும் அரிசியையும் குக்கரில் நன்றாகக் குழைய வேக விட வேண்டும்

ஏலக்காயை நன்றாகப் பொடி செய்து கொள்ள வேண்டும் முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
குழைந்து வெந்த பருப்புச் சோற்றோடு பொடிப்பொடியாக்கிய அரைக்கிலோ கற்கண்டு உட்பட அனைத்தையும் சேர்த்து

நன்கு கிளறி எடுத்தால் கற்கண்டு சோறு தயார்.இனி என்ன சுவைக்க வேண்டியது தான்.
Tags: