சீரகப் பொடி செய்வது | Cumin seeds to powder !





சீரகப் பொடி செய்வது | Cumin seeds to powder !

தேவையான பொருட்கள் 

சீரகம் -- 100 கிராம் 

இஞ்சி -- 50 கிராம் 

எலுமிச்சம் பழம் -- 15 (அ) 

20 ஏலக்காய் -- 10 கிராம் (தோல் நீக்கியது) 

சீனா கல்கண்டு -- 100 கிராம் 

செய்முறை 

இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி 'ஜூஸ்' எடுக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக் கொள்ளவும். 
சீரகப் பொடி செய்வது

அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும்.

சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக் கொள்ளவும்.

இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும்(24 மணி நேரம்). 

மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊற வைக்க வேண்டும்.

இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ள வேண்டும். 

உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி / உரலில் போட்டு அரைத்து எடுக்கவும்.

இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும். சீரகப்பொடி தயார். 

குறிப்பு: 

வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. மேலும் பித்தம், ஏப்பம், தலை சுற்றல் போன்ற வைகளும் சரிப்படும்.

இதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேவையான சமயத்தில் சாப்பிட வேண்டும்.
Tags: