குளிர்காலத்தில் ஆரஞ்சு பழத்தினை கண்டிப்பா சாப்பிடுங்க !





குளிர்காலத்தில் ஆரஞ்சு பழத்தினை கண்டிப்பா சாப்பிடுங்க !

குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் ஆரஞ்சு பழம் என்றாலே சளி பிடிக்கும், குளிர்காலத்தில் சாப்பிடக்கூடாது என்று தான் கேள்விப்பட்டிருப்போம்.
குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம்
ஆனால் குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழம் என்றால் அது ஆரஞ்சு தானாம். அதிலும் கமலா ஆரஞ்சு சாப்பிடுவது மிகவும் சுவையாக இருக்குமாம்.

குளிர்காலத்தில் உடல் வெப்பநிலை குறைவு, நோயெதிர்ப்பு சக்தி குறைவு, சருமம் வறண்டு போகுதல், செரிமான மண்டலம் பலவீனம் இதற்கு எல்லாம் தீர்வு கொடுக்கின்றதாம்.
ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. 

வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும். மற்ற சிட்ரஸ் பழங்களைப்போல் இதிலும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது.

ஆரஞ்சு பழத்தில் நார்சத்து அதிகம் இருப்பதால் எடையைக் குறைப்பதோடு, செரிமான ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றது.

இதில் இருக்கும் வைட்டமின் சி குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலம், சரும ஆரோக்கியம் மற்றும் செரிமான மண்டலம் போன்றவை சற்று பலவீனமாக இருப்பதை எதிர்த்து போராடுவதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கின்றது.

குளிர் காலத்தில் ஏற்படும் சளி பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கின்றதாம். வைட்டமின் சி, சளி பிரச்சனைக்கு தீர்வளிக்கக்கூடியது.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. இதை குளிர் காலத்தில் உட்கொண்டால், சளி பிரச்சனையைத் தடுக்கலமாம்.
ஆரஞ்சு பழத்தில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள, இதய நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதாக நம்பப்படுகிறது. பக்கவாதத்திற்கு எதிர்த்து போராடுகின்றது.
சிறுநீரில் சிட்ரேட் குறைபாட்டினால் சிறுநீரக கற்கள் ஏற்படுகிறது. சிட்ரேட் என்பது சிட்ரிக் அமிலம். இது சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் காணப்படும்.

பொதுவாக சிறிய அளவிலான சிறுநீரக கற்களை கொண்ட நோயாளிகளுக்கு ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க மருந்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
Tags: