Recent Posts


கருப்பு கடலை சூப் செய்வது எப்படி?

Subscribe Via Email

என்னென்ன தேவை?

கருப்பு கொண்டைக் கடலை - 1 கப்,

வெண்ணெய் - 1 டீஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு,

மிளகுத் தூள் - தேவைக்கு,

கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?
கருப்பு கடலை சூப்
கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் வேக வைத்து, சிறிது கொண்டைக் கடலையை தனியாக எடுத்து வைக்கவும். 

மீதமுள்ள கடலையை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். 

அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருக்கி சீரகம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த கடலை விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். 

மேலே மிளகுத் தூள், தனியாக எடுத்து வைத்த கொண்டைக் கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close