மட்டன் கொழுப்பு கறி செய்வது எப்படி? | How to make mutton fat curry?





மட்டன் கொழுப்பு கறி செய்வது எப்படி? | How to make mutton fat curry?

0
தேவையான பொருட்கள் :

மட்டன் கொழுப்பு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 10

மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்

சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 மட்டன் கொழுப்பு கறி செய்வது

வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மட்டன் கொழுப்பு, மிளகாய்த் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் அல்லது கொழுப்பு வேகும் வரை வேக விட்டு இறக்கவும்.
கொழுப்பு மட்டுமே சேர்த்து செய்யும் இந்தக் கறி, சுவையாக இருக்கும். இட்லியுடன் பரிமாறவும்.

குறிப்பு :

கொழுப்பில் இருந்து அதிகம் எண்ணெய் பிரியும் என்பதால், தாளிக்க குறைந்த அளவு எண்ணெய் சேர்த்தால் போதும்.

வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த குழம்பை சாப்பிட வேண்டாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)