மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன.
வங்காளம், அசாம் மற்றும் நாட்டின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளில் மீன் கட்டாயம் இருக்கும்.
அவர்கள் அதிகளவு மீன் உணவுகளை நேசிப்பதை நாம் சில சமயங்களில் வேடிக்கையாக பார்த்திருக்கலாம்,
இல்லை கேலி கூட செய்திருக்கலாம். ஆனால் மீன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்பது உண்மையே. மீன் சாப்பிடுவது முக்கியமானது.
அது ராகு அல்லது பெட்கி போன்ற பெரிய மீன் வகையாக இருந்தாலும் சரி, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற சிறிய மீன் வகையாக இருந்தாலும் சரி.
ஒவ்வொரு வகையான மீன்களும் அதன் தனித்துவமான சுவையில் இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
மீன்களை வறுத்து சாப்பிட்டாலும், வேகவைத்து சாப்பிட்டாலும், குழப்பு வைத்து சாப்பிட்டாலும் ருசி அருமையாக இருக்கும்.
மீன் சமைக்க மிகவும் எளிதானது. ஏனெனில் அதன் சதை பகுதிகள் சீக்கிரத்தில் வேகும் தன்மை கொண்டது.
மற்ற உணவுகளை போல் இல்லாமல் கொழுப்பு வகை மீன்களான சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி ஆகியவை உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.
முக்கியமாக ஒமிகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதனால் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக அமைகிறது.
தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது.
கோழி, மட்டன் போன்ற மாமிச உணவுகளுக்கு பதிலாக அன்றாடம் மீன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரியான கொலஸ்ட்ராலில் இருந்து தப்பிக்கலாம்.
மீன்களில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், மீன் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும்.
வைட்டமின் டி நம் உடலில் உள்ள அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. எனவே தினசரி உணவில் ஏதேனும் ஒரு வகை மீனை சேர்த்து கொள்ளுங்கள்.