30 வகை சிக்கன் ரெசிபி / Chicken Varieties !





30 வகை சிக்கன் ரெசிபி / Chicken Varieties !

கோழி (chicken) என்பது காடுகளிலும், மனிதர்களால் வீடுகளிலும் அதற்கான கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். 
30 வகை சிக்கன் ரெசிபி / Chicken Varieties !
இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது. 

பொதுவாக இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. 

நாட்டுக் கோழிகள் இயற்கை உணவுகளும் தானியங்களும் கொண்டு வளர்க்கப்படுகிறது. 

இதில் புரதசத்து நிறைந்திருக்கிறது. நம் உடலுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. 

நாட்டுக்கோழி அடித்து சாப்பிட்டால் உடம்புக்கு உரம் இட்டது போல் திம்மென்று இருக்கும் என்று சொல்லும் முன்னோர்களின் வாக்கு இன்று வரை பொய்க்கவில்லை என்று சொல்லலாம். 
அசைவப் பிரியர்களில் அதிகமானோர் கோழி இறைச்சியை விரும்ப காரணம் இதன் சுவை தான். 

எலும்புகள் இல்லாமல் மிருதுவான இந்த இறைச்சியை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுகிறார்கள். 

சிக்கன் 65, சில்லிசிக்கன், பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன், பெப்பர் சிக்கன், மஞ்சூரியன், நாட்டிசிக்கன், சிக்கன் ரோல், சிக்கன் க்ரேவி, கபாப் சிக்கன், 
சிக்கன் வறுவல், சிக்கன் பராத்தா, க்ரிஸ்பி சிக்கன், ஸ்பிரிங் சிக்கன், கார்லி சிக்கன், சிக்கன் லாலிபாப், சிக்கன் டிக்கா இன்னும் இன்னும் விதவிதமான வகைகளில் 

ருசிக்க ருசிக்க திகட்ட திகட்ட வித்தியாசமான சுவைகளில் உமிழ்நீர் சுரக்க சுரக்க சப்புக்கொட்டி சாப்பிடுபவர்கள் 

மீண்டும் மீண்டும் இதை நாடுவதற்கு காரணமும் கோழி இறைச்சியின் அலாதியான சுவைதான்.