வெள்ளை வெஜிடேபிள் குருமா செய்வது எப்படி?





வெள்ளை வெஜிடேபிள் குருமா செய்வது எப்படி?

0
வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? 
வெள்ளை வெஜிடேபிள் குருமா செய்வது எப்படி?
வீட்டில் கேரட், பீன்ஸ், மீல் மேக்கர், பன்னீர் போன்றவை உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையைக் கொண்ட ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை வெஜிடேபிள் குருமா செய்யுங்கள். 

இந்த வெஜிடேபிள் குருமா செய்வது மிகவும் சுலபம். மேலும் இந்த குருமாவை செய்தால், விருந்தினர்களிடம் நல்ல பாராட்டைப் பெறலாம்.
 
உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை வெஜிடேபிள் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெசிபியின் எளிய செய்முறை படித்து செய்து சுவைத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் : .
 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
 
சீரகம் - 1/2 டீஸ்பூன்
 
பன்னீர் - 100 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
 
கேரட் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
 
பீன்ஸ் - 6 (துண்டுகளாக்கப்பட்டது)
 
காலிஃப்ளவர் - 1/2 கப் (நறுக்கியது)
 
பச்சை பட்டாணி - 1/2 கப்
 
மீல் மேக்கர் - 1/2 கப்
 
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
 
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
 
உப்பு - சுவைக்கேற்ப
 
சர்க்கரை - 1 டீஸ்பூன்
 
கொத்தமல்லி - சிறிது
 
அரைப்பதற்கு...
 
துருவிய தேங்காய் - 1/2 கப்
 
பூண்டு - 2 பல்
 
இஞ்சி - 1 இன்ச்
 
சோம்பு - 1 டீஸ்பூன்
 
பட்டை - 1 துண்டு
 
செய்முறை : . 
வெள்ளை வெஜிடேபிள் குருமா செய்வது எப்படி?
முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி விட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து விட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளைப் போட்டு லேசாக ப்ரை செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு அதில் சீரகத்தைப் போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

அசத்தலான ஹோட்டல் குருமா செய்வது எப்படி?

பிறகு அதில் சிறிது உப்பைத் தூவி கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
பின்னர் அதில் பட்டாணி, மீல் மேக்கரை சேர்த்து நன்கு கிளறி, மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, சிறித நீரை ஊற்றி, சர்க்கரை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
 
பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 5-8 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்த மல்லியைத் தூவினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை வெஜிடேபிள் குருமா தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)