சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது? ஏன் தெரியுமா?

சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது? ஏன் தெரியுமா?

0

உடலிலேயே அதிகமாக சக்தி செலவழிக்கபடுவது செரிமானத்திற்கு தான். செரிமானம் என்பது உடல் நம்முடன் வியாபாரம் செய்வது போன்றது‌. 

சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது? ஏன் தெரியுமா?
நம்மிடம் இருந்து பழைய சக்தியை செலவழித்து மீண்டும் புதிய மற்றும் அதிகமான சக்தியை பெறுகிறது. 20 % செலவு செய்து 80 % சதவீதம் சக்தி பெறும் நமது உணவின் மூலமாக பெறும். 

தூக்கம் என்பது எந்தவொரு செயலும் செய்யாமல் உடல் முழுவதும் சக்தியை பகிர்ந்தளிக்க மற்றும் ஓய்வின் மூலம் புத்துணர்ச்சி பெற வைக்கும் நேரம். சாப்பிட்ட பின்னர் தூங்குவதால் இந்த இரண்டுமே சரிவர செய்ய முடியாமல் தவிக்கும். 

உடற்பயிற்சி என்பது சக்தியை எரித்து திறனை அதிகப்படுத்தும் பயிற்சி. இதனை தனித்தனியாக செய்வதே நல்லது. சாப்பிட்ட பின் 2 மணிநேரம் கழித்து தான் உறங்க வேண்டும். அப்போது தான் நல்லது. 

வெறும் வயிற்றில் தான் உடற்பயிற்சி யோகா தியானம் எதுவாக இருந்தாலும் செய்ய வேண்டும். முதலில் உடற்பயிற்சி அதன்பின் உணவு 2 மணிநேரம் கழித்து உறக்கம் இது தான் செய்ய வேண்டிய முறை. 

ஆண்கள் ஏன் தாடி வளர்க்கிறார்கள் !

மாற்றினால் உடலும் மாறும் தேவையில்லாத பிரச்சினைகள் வரும். குறைந்தது ஒரு மணி நேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும். சாப்பிட்டதும் குளிக்க கூடாது. 

குறைந்தது 2 மணி நேரம் கழித்தே குளிக்க வேண்டும். சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது. உணவை சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்தக் கூடாது. 

ஏனெனில் உணவை செரிக்க வைப்பதற்காக வயிற்றில் திராவகம் சுரக்கப்பட்டு இருக்கும். உணவு உண்டபின் உடனே தண்ணீர் அருந்துவதால் அது நீர்த்துப் போய் விடும். 

இதனால் செரிமானம் ஆவது தாமதமாகும். ஆகையால் சாப்பிட்டு முடித்து அரை மணி நேரம் கழித்து தண்ணீர் அருந்துவது சிறந்தது.

சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கும் அப்போது குடிக்க வேண்டும். சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணி நேரங்களாகும். 

பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம் தான். இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.

சாபிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக் கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாபிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.

சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது? ஏன் தெரியுமா?

குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்க வேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்து விடும்.

சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். 

மஞ்சள், பால், மிளகு அருந்துவதால் உண்டாகும் பலன்கள் !

இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும். நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யக்கூடாது. 

ஏனெனில் சாப்பிட்டு முடித்தவுடன் செரிப்பதற்காக உடலின் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்கு அதிகமாக செல்லும். நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யும் பொழுது இரத்த ஓட்டம் உடல் முழுவதும் செல்லும் இதனால் செரிமானம் பாதிப்படையும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)