டேஸ்டியான பன்னீர் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?





டேஸ்டியான பன்னீர் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?

0

மோரில் இருந்து தயிரைப் பிரித்து, அதை அழுத்தி ஒரு திடமான பாலாடைக் கட்டியை உருவாக்குவதன் மூலம் இது தயாரிக்கப் படுகிறது. குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு பனீர் ஒரு அற்புதமான புரதம். 

டேஸ்டியான பன்னீர் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?

உடலின் சரியான செயல்பாட்டுக்கு தேவையான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கவும் இது உதவுகிறது. 

எலும்புகள், பற்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் வளமான மூலமாக பனீர் உள்ளது. பனீரில் அதிக அளவு ஜிங்க் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

சளி, காய்ச்சல் மற்றும் தொற்று போன்ற பொதுவான நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. சரி இனி பன்னீர் பயன்படுத்தி டேஸ்டியான பனீர் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

புரதம் நிறைந்த மத்தி மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் ! 

தேவையானவை : 

சப்பாத்தி - 2, 

பனீர் - அரை கப் (துருவியது), 

வெங்காயம் - ஒன்று, 

பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் ( இரண்டும் சேர்த்து) - அரை கப், 

கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், 

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், 

உப்பு, நெய் - தேவையான அளவு.

செய்முறை : 

டேஸ்டியான பன்னீர் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி?

ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும்… பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் சேர்த்து வதக்கவும். 

பின்னர் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி… துருவிய பனீர் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். சப்பாத்திக்குள் பனீர் கலவையை வைத்து சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். 

எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் நிறைந்த உணவு !

தக்காளி சாஸ், ராய்தா இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

Post a Comment

0Comments

Post a Comment (0)