ஜலதோசம் பிடிச்சிருக்கும் போது இதை சாப்பிடாதீங்க.. கஷ்டப்படுவீங்க !





ஜலதோசம் பிடிச்சிருக்கும் போது இதை சாப்பிடாதீங்க.. கஷ்டப்படுவீங்க !

0

குளிர்காலம் என்பதால் நிறைய பேர் குளிர்ச்சியான காலநிலையின் காரணமாக சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். 

ஜலதோசம் பிடிச்சிருக்கும் போது இதை சாப்பிடாதீங்க.. கஷ்டப்படுவீங்க !
இப்படி சளி பிடித்திருக்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது முற்றி நமது உடலையும் மனதையும் மோசமாக பாதிக்கும்.

குறிப்பாக சளி பிடித்திருக்கும் போது தான், வாய்க்கு சுவையாக நன்கு காரமாக சாப்பிடத் தோன்றும். இது போன்று பல உணவுகளை சாப்பிட வேண்டுமென்ற ஆவல் எழும். 

ஆனால் சில உணவுகள் சளி, இருமல் பிரச்சனையை மோசமாக்கும். அந்த உணவுகளை தெரியாமல் இன்றும் பலர் உட்கொண்டு வருகிறார்கள். 

இப்போது சளி பிடித்திருக்கும் போது எந்த உணவுகளை யெல்லாம் ஒருவர் சாப்பிடக் கூடாது என்பதைக் காண்போம்.

பால் பொருட்கள் . :

ஜலதோசம் பிடிச்சிருக்கும் போது இதை சாப்பிடாதீங்க.. கஷ்டப்படுவீங்க !
பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், உடன் லாக்டின் (புரதம்), லாக்டோசு (இரட்டைச்சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

சளி பிடித்திருக்கும் போது பால் மற்றும் பிற பால் பொருட்களை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் இந்த வகையான பொருட்கள் அதிக சளியை உருவாக்கி, நிலைமையை மோசமாக்கும். 

ஆய்வுகளின் படி, சளி பிடித்திருக்கும் போது பால் பொருட்களை உட்கொள்ளும் போது, அது உடலில் உள்ள சளியை அதிகரிப்பதற்கான பதிலாக, இருக்கும் சளியை தடிமனாகவும், வெளியேற்ற முடியாதவாறும் மாற்றும். 

எனவே சளி பிடித்திருக்கும் போது, பால் மற்றும் பிற பால் பொருட்களை தவிர்த்திடுங்கள்.

பொரித்த மற்றும் காரமான உணவுகள் . :

சளி பிடித்திருக்கும் போது காரமான உணவுகளை உட்கொண்டால், சளி உருகி எளிதில் வெளியேறும் என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். 

ஆனால் ஆய்வு ஒன்றின் படி, காரமான உணவுகளில் உள்ள கேப்சைசின் அதிக சளி உற்பத்தியைத் தூண்டுகிறது. வேண்டுமானால் காரமான உணவுகளை உண்டதும் சில நிமிடங்களுக்கு சளியில் இருந்து நிவாரணம் கிடைத்தது போன்று இருக்கலாம். 

ஆனால் அது சளி பிரச்சனையில் இருந்து மீள தாமதமாக்குவதோடு, நிலைமையை மோசமாக்கும்.

காப்ஃபைன் . :

ஜலதோசம் பிடிச்சிருக்கும் போது இதை சாப்பிடாதீங்க.. கஷ்டப்படுவீங்க !

காப்ஃபைன் அடங்கிய உணவுகளை உட்கொண்டால் உடல் மற்றும் மன ரீதியான சோர்வுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளங்கும் என்று சொல்லப் படுகிறது. 

அதனை குறைவான அளவில் உட்கொண்டால் சிறப்பாக செயல்பட்டு உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், சளி பிடித்திருக்கும் போது, காபி, டீ மற்றும் பிற குளிர்பானங்களை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 

ஏனெனில் இவை அனைத்துமே உடலை வறட்சியடையச் செய்யும் மற்றும் உடலில் உள்ள சளியை தடிமனாக்கி, சளியை இன்னும் அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும். 

ஆகவே காப்ஃபைன் நிறைந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை . :

சளி பிடித்திருக்கும் போது குடிக்கும் பானங்களில் சர்க்கரையை அதிகம் சேர்த்து குடிப்பத்தை தவிர்த்திடுங்கள். உடல்நல நிபுணர்களின் கூற்றுப்படி, சளி பிடித்திருக்கும் போது ஜூஸ்களைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 

ஏனெனில் அவற்றில் அதிகப்படியான சர்க்கரை இருக்கும். இவை இரத்த வெள்ளை யணுக்களின் அளவைக் குறைத்து, தொற்றுக்களை சமாளிக்கும் திறனைக் குறைக்கும்.

ஆல்கஹால் . :

ஜலதோசம் பிடிச்சிருக்கும் போது இதை சாப்பிடாதீங்க.. கஷ்டப்படுவீங்க !

எத்தனால் என்பது திராட்சை, பார்லி போன்றவற்றின் நொதித்தல் மூலம் தயாரிக்கப்படும் ஒரு வகை ஆல்கஹால் ஆகும். எத்தனால் மூளையில் ஏற்படும் மனச்சோர்வு விளைவுகளால் போதையை ஏற்படுத்துகிறது. 

இது ஆல்கஹால் அளவு அதிகரிக்கும் போது மன மற்றும் உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மது அருந்துவதால் அதிக அளவு மது போதை ஏற்படலாம்.

சளி பிடித்திருக்கும் போது ஒரு கட்டிங் அடித்தால் நிவாரணம் கிடைக்கும் என்பார்கள். ஆய்வு ஒன்றின் படி, மது அருந்துவது நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி அதிகரிப்புடன் தொடர்பு கொண்டுள்ளது. 

மேலும் ஆல்கஹால் இரத்தத்தில் உள்ள வெள்ளை யணுக்களை கட்டுப்படுத்தி, சளிக்கு எதிராக போராடுவதைத் தடுக்கிறது. 

அது மட்டுமின்றி, ஆல்கஹால் உடலை வறட்சியடையச் செய்யும். எனவே சளி பிடித்திருக்கும் போது மது அருந்துவதை நிறுத்துங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)