சமையல் செய்யும் போதே வெடித்த குக்கர்.. அதிர்ச்சி காட்சிகள் !

சமையல் செய்யும் போதே வெடித்த குக்கர்.. அதிர்ச்சி காட்சிகள் !

0

சரிவர குக்கரை பராமரிக்காவிடில் ஏற்படும் பின்விளைவு குறித்து விடியோவுடன் எச்சரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

சமையல் செய்யும் போதே வெடித்த குக்கர்.. அதிர்ச்சி காட்சிகள் !
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவில், குடும்பத்தினர் தங்களின் வீட்டில் வழக்கமான சமையல் பணிகளை மேற்கொண்டு இருந்தனர். வீட்டில் குடும்ப தலைவரும் இருந்துள்ளார்.

இந்நிலையில், அடுப்பில் வைக்கப்பட்டு இருந்த குக்கர், திடீரென வெடித்து சிதறியது. இதனை சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் ஒருகணம் அதிர்ந்து போயினர். 

நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை. இது குறித்த காட்சிகள் அங்கிருந்த கேமிராவில் பதிவாகி இருக்கிறது. குக்கர் வெடித்ததற்கான காரணம் என்பது தெரியவில்லை. 

ஆனால், குக்கரை சரியாக கையாளாதது விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என தெரிய வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது போன்ற சம்பவத்தில் குக்கர் வெடித்து 47 வயது பெண்மணி பரிதாபமாக பலியாகினர். 

(getCard) #type=(post) #title=(You might Like)

குக்கரின் சில பாகங்கள், அவரின் உடலில் ஒட்டிக் கொண்டு தீக்காயத்தையும் ஏற்படுத்தியதால் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. குக்கரை சரியாக கழுவாத பட்சத்திலும், அதன் வாசர் சரிவர பொருந்த வில்லை என்றாலும் வெடிக்கும் ஆபத்து அதிகம். 

குக்கரில் விசில் அடிக்கும் துளை சரியாக உள்ளதா? காற்று வெளியேறுகிறதா? என்பதை சோதித்த பின்னரே அடுப்பில் வைத்து உபயோகம் செய்ய வேண்டும்.

அதேபோல, அளவுக்கு அதிகமான நேரம் குக்கரை தொடர்ந்து தீயில் வைத்து, குக்கருக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் வெந்து, நீர் ஆவியாகி வெளியேறியும் கவனிக்காமல் விட்டால் வெடிக்கும் ஆபத்து அதிகம். 

ஆகையால், நமது சிறு அலட்சியமும் குக்கர் வெடிப்புக்கு வழிவகை செய்யும் என்பதால் கவனம் முக்கியம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)