பீர்க்கங்காய் கிரேவி இப்படி செய்யுங்க.. அருமையா இருக்கும் !





பீர்க்கங்காய் கிரேவி இப்படி செய்யுங்க.. அருமையா இருக்கும் !

0

பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

பீர்க்கங்காய் கிரேவி இப்படி செய்யுங்க.. அருமையா இருக்கும் !
பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்றுக் நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. 

மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? 


வழக்கமாக செய்யும் சைடு டிஷ்ஷை விட சற்று வித்தியாசமான, அதே சமயம் ருசியான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காயைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். 

கள்ள உறவு ஏன்… எப்படி… உருவாகிறது..? ரூசீகரமான தகவல்கள் !

இந்த கிரேவி சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சொல்லப்போனால் இந்த கிரேவி சிக்கன் கிரேவியையே தோற்கடிக்கும் வகையில் ருசியாக இருக்கும். 


தேவையான பொருட்கள் : .

பீர்க்கங்காய் - 200 கிராம் (தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்) 


பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) 


பெரிய தக்காளி - 1 (நறுக்கியது) 


இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 


பச்சை மிளகாய் - 2 


காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 


மல்லித் தூள் - 1 டீஸ்பூன் 


மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 


கரம் மசாலா - 1 டீஸ்பூன் 


கசூரி மெத்தி - 1 டீஸ்பூன் 


தயிர் - 1 கப் 


எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன் 


கடுகு - 1 டீஸ்பூன் 


சீரகம் - 1/2 டீஸ்பூன் 


பிரியாணி இலை - 1 


தண்ணீர் - 1/2 கப் 


உப்பு - 1 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிது 


கொத்தமல்லி - சிறிது 

வாசனை திரவியம் பயன்படுத்தும் பெண்களுக்கு !

செய்முறை : .

பீர்க்கங்காய் கிரேவி இப்படி செய்யுங்க.. அருமையா இருக்கும் !

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் பச்சை மிளகாயை நறுக்கி போட்டு வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். 


அடுத்து தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். 


பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். 


பிறகு பீர்க்கங்காயை சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து பீர்க்கங்காயை வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து அடிப்பிடிக்காமல் இருக்க கிளறி விடுங்கள். 

குள்ளமாக இருந்தால் உடல் எடையைக் குறைக்க முடியாது ஏன் தெரியுமா?

பீர்க்கங்காய் நன்கு வெந்ததும், கெட்டி தயிரை சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி விட வேண்டும். 

பின் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து, மீண்டும் 3-5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். 


கிரேவி நன்கு கொதித்ததும், அதில் கசூரி மெத்தியை கையால் நசுக்கிப் போட்டு, அத்துடன் கொத்த மல்லியையும் தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான பீர்க்கங்காய் கிரேவி தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)