சில இனிப்புகள் மேல் வெள்ளி நிறம் ஏன் இருக்கிறது?

சில இனிப்புகள் மேல் வெள்ளி நிறம் ஏன் இருக்கிறது?

1

இந்தியாவில் விலை உயர்ந்த சுவீட்களின் மீதும், பிரியாணியின் மீதும், வெள்ளி நிறத்தில் பளபளவென்று மின்னுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்போது பிரியாணி தான் உங்கள் கருத்தைக் கவரும். 

சில இனிப்புகள் மேல் வெள்ளி நிறம் ஏன் இருக்கிறது?
அதன் மேல் மின்னும் பொருள் என்ன என்ற கோணத்தில் பெரும்பாலும் சிந்திக்க மாட்டீர்கள். மெல்லிய வெள்ளி இழைகள் தான் அந்த சுவீட்களின் மீது அமர்ந்து மின்னிக் கொண்டிரு்கிறது. 

சுபாரி, பான், பீடா, பழங்கள் போன்றவற்றின் மேலும் வெள்ளி இழை பேப்பர்கள் ஒட்டப்படுவது உண்டு. கண்களையும், கருத்தையும் கவர்ந்து அதனை சாப்பிட வேண்டும் என்ற உந்துதலை உருவாக்க அந்த வெள்ளி இழை பயன்படுத்தப் படுகிறது. 

அத்தகைய இனிப்புகளை குழந்தைகள் பிரயமாக வாங்கிச் சாப்பிடுவார்கள். பெரியவர்களையும் இந்த வெள்ளி இழை போர்த்திய உணவுகள் கவரத்தான் செய்கின்றன. 

பிரியாணி இலையின் நன்மை தெரியுமா? உங்களுக்கு !

ஆண்டு தோறும் சுமார் 2,75,000 கிலோ வெள்ளி உலோகம், இழைகளாக மாற்றப்பட்டு இனிப்புகளின் மீதும், பிரியாணி, பீடா, பழங்கள் போன்ற மற்ற உணவுப் பொருட்களின் மீதும் ஒட்டப்பட்டு உண்ணப் படுகிறது. 

275 டன் வெள்ளியை நாம் ஆண்டு தோறும் சாப்பிடுகிறோம் என்றால், அது மிகப்பெரிய அளவே. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக உணவை அழகு படுத்தும் பொருளாக வெள்ளி இழை பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது. 

வெள்ளியும் தங்கமும் மந்த உலோகங்கள் என்பதால், குறைவான அளவில் சாப்பிட்டால், உடலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது.

வெள்ளி இழை எப்படி தயாராகிறது தெரியுமா? 

சில இனிப்புகள் மேல் வெள்ளி நிறம் ஏன் இருக்கிறது?

நூறு கிராம் வெள்ளியை எடுத்து ஒரு அங்குல அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறார்கள். ஒரு வெள்ளித்துண்டு மீது, ஜெர்மன் பட்டர் பேப்பர்என்று அழைக்கப்படும் ஸ்பெஷல் பேப்பரை வைக்கிறார்கள்.

அதன் மீது மீண்டும் ஒரு வெள்ளித்துண்டு, அதன் மேல் ஜெர்மன் பட்டர் பேப்பர, இப்படி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப் படுகிறது. பின்பு 8 மணி நேரம் மரத்தால் செய்யப்பட்ட சுத்தியலால் அடிக்கப் படுகிறது. 

சந்திரனுக்கு பயணிப்பதற்கான முயற்சியை பற்றிய முதல் கதை !

வெள்ளித்துண்டு மிகமிக மெல்லிய இழையாக ஆகும் வரை அடிக்கப் படுகிறது. ஒரு வெள்ளி இழையின் தடிமன் சுமார் 0.0025 மில்லி மீட்டர். இது மனித சருமத்தைவிட மென்மையானது.

Tags:

Post a Comment

1Comments

  1. குழ‌ந்தைகளை கவர இப்படி வெள்ளி கலர் போட்டு இருக்கலாம்...

    ReplyDelete
Post a Comment