கலாக்காய் ஜூஸ் ரெசிபி செய்வது எப்படி?





கலாக்காய் ஜூஸ் ரெசிபி செய்வது எப்படி?

0

பொதுவாக, இந்த களாக்காயில் ஊறுகாய் போடுவார்கள்.. இது ஒரு சீசன் காய் என்பதால், கிடைக்கும் காலத்திலேயே ஊறுகாயாக போட்டு வைத்து கொள்வார்கள்.  

கலாக்காய் ஜூஸ் ரெசிபி செய்வது எப்படி?
இதற்கு காரணம், கிட்டத்தட்ட எலுமிச்சையை போலவே குணமுள்ளது இந்த கலாக்காய். வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம், அஜீரண பிரச்சனைகளை களாக்காய் சரி செய்கிறது. குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. 

நோய் தொற்றுகளை அண்ட விடாமல் தடுக்கிறது. மாத விலக்கு பிரச்சனை இருக்கும் பெண்கள், களாக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். 

அதே போல, பிரசவமான பெண்களுக்கு, கருப்பையில் உள்ள அழுக்கை வெளியேற்ற இந்த காய் தான் துணை புரிகிறது. இந்த காயில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் அடிவயிற்று வலியை சரி செய்கிறது. 

உலர வைத்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சீரணமின்மை, வாயு மற்றும் வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

கொழுப்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.... தெரிந்து கொள்ளுங்கள் !

தேவையான பொருட்கள் : .

கலாக்காய் பழங்கள் - 10 

தண்ணீர் - 1 கப் 

உப்பு மற்றும் சர்க்கரை - தேவைக்கேற்ப

செய்முறை : .

கலாக்காய் ஜூஸ் ரெசிபி செய்வது எப்படி?

பழங்களை வெட்டி விதைகளை நீக்கி கொள்ளுங்கள். இப்பொழுது இதை மிக்ஸியில் போட்டு அரைத்து சாற்றை வடிகட்டி கொள்ளுங்கள்.

அத்துடன் உப்பு மற்றும் சர்க்கரை போட்டுக் கொள்ளுங்கள். ஜூஸ் ரெடி...

கையை வைத்து விதைப்பையின் அளவைக் அறிய !

கவனத்தில் வைக்க வேண்டியவை : .

இந்த காயை அதிக அளவிலோ அல்லது நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தாலோ பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும். ஆண்களின் விந்தணுக்கள் மற்றும் விரைப்புத் தன்மையில் பிரச்சனை ஏற்படும்.

அதிகளவு எடுத்துக் கொள்ளும் போதுமான அசிடிட்டி பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். பழுக்காத பழங்கள் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

இரத்த சம்பந்தமான நோய்களை இது மிகவும் பெரிதாக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)