சுவையான மட்டன் கீமா மோமோஸ் செய்வது எப்படி?

சுவையான மட்டன் கீமா மோமோஸ் செய்வது எப்படி?

0

மோமோஸ் ரெசிபியானது நேபாளத்தில் தோன்றி இன்று உலகம் முழுவதும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உண்வு வகைகளில் ஒன்றாக உள்ளது. 

சுவையான மட்டன் கீமா மோமோஸ் செய்வது எப்படி?

நூடுல்ஸ் போன்று மோமோஸையும் இன்றைய குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள். மோமோஸில் வெஜ் மோமோஸ், சிக்கன் மோமோஸ், சாக்லேட் மோமோஸ், பன்னீர் மோமோஸ் என்று பல விதங்களில் செய்யலாம். 

அந்த வகையில் இன்று நாம் மட்டன் கீமா வைத்து மோமோஸ் காண உள்ளோம். இதனை சிறு குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய அளவிற்கு இதன் சுவை மிகவும் சூப்பராக இருக்கும். 

இதனை செய்யும் பொழுதே குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட காத்து இருப்பார்கள். மோமோஸினை மைதா மாவில் செய்வார்கள். 

ஆனால் நாம் கோதுமை மாவு வைத்து செய்வதால் இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் அனைவருக்கும் ஏற்ற ஒரு ரெசிபி ஆகும். 

வாருங்கள்! நாவூறும் மட்டன் கீமா மோமோஸ் ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் : .

கோதுமை மாவு- 1 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

ஸ்டஃபிங் செய்வதற்கு : .

மட்டன் கீமா - 250 கிராம் 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

மல்லித் தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலா - 2 ஸ்பூன்

சாட் மசாலா - 1 ஸ்பூன்

மல்லித்தழை - கையளவு 

பச்சை மிளகாய் - 1 

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு

வீட்டில் ஆண்கள் ஓதுக்கப்படுகிறார்களா?

செய்முறை : .

சுவையான மட்டன் கீமா மோமோஸ் செய்வது எப்படி?

முதலில் மட்டன் கீமாவை அலசி வைத்துக் கொண்டு அதனை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வேக வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

பச்சை மிளகாயை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய விலாசமான பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து உப்பு தூவி வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி சாஃப்ட்டாக பிசைந்து சுமார் 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின் அதில் கீறிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பிறகு அதில் வேக வைத்துள்ள மட்டன் கீமாவை ஸ்டாக்குடன் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வரை வதக்கி விட வேண்டும். 

பின் அதில் மல்லித்தூள்,மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,சாட் மசாலா மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து மசாலாக்களின் காரத் தன்மை போகும் வரை வதக்கி விட்டு பின் அதிலுள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். 

இப்போது பிசைந்து வைத்துள்ள மாவினை ஒரே அளவிலான சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு ஒவ்வொரு உருண்டையையும் பூரி அளவில் தேய்த்து அதன் நடுவில் கீமா மசாலாவை வைத்து கோன் வடிவத்தில் மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

இப்போது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, இட்லி தட்டின் மேல் சிறிது எண்ணெய் ஸ்ப்ரெட் செய்து அதில் வைத்துள்ள மோமோஸ்களை வைத்து விட வேண்டும்.

இட்லி தட்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து, சுமார் 15 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால், சூப்பரான கீமா மோமோஸ் ரெடி!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)