குறைந்த உடல் செயல்பாடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் கொலஸ்ட்ரால் உட்பட பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகரிக்கும் பொழுது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
இந்நிலையில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஒரு அற்புதமான வீட்டு வைத்தியத்தை இன்றைய பதிவில் பார்ப்போம்.
ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை 50 க்கு பிறகும் சிறப்பாக இருக்க வேண்டுமா?
இந்த குறிப்புகளை ஆயுர்வேத நிபுணரான ஐஸ்வர்யா சந்தோஷ் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நமது சமையலறையில் கிடைக்கக்கூடிய பால் மற்றும் பூண்டில் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
பூண்டில் வைட்டமின் B, C, செலினியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச் சத்துக்களுடன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன.
அதே சமயம், பாலில் புரதம் கால்சியம், வைட்டமின் A, D, K, E போன்ற அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. இந்த இரண்டு பொருட்களையும் தனித்தனியாக பயன்படுத்தி இருப்போம்.
ஆனால் இவ்விரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் முதல் கொலஸ்ட்ரால் வரை பல உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். பூண்டு பால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சிறந்தது.
கொலஸ்ட்ரால் குறைய பூண்டு பால் : .
உறவின் போது ஆண்களுக்கு வெறுப்பை தரும் பெண்களின் இந்த செயல்கள் !
பூண்டு பால் குடிப்பது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்பை நீக்க உதவுகிறது. மேலும் நல்ல கொழுப்பை மேம்படுத்துவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களைத் தடுக்க உதவுகின்றன. மேலும், பூண்டில் உள்ள அல்லிசின் எனும் தனிமம் இரத்த நாளங்களை விரிவுப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்கிறது.
இதய செயல்பாட்டை அதிகரிக்கும் இந்த பூண்டு பாலை வீட்டிலேயே தயார் செய்து குடிக்கலாம்.
பூண்டு பாலின் மற்ற நன்மைகள் : .
இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் வாயு, வயிற்றுப் பொருமல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
உடலின் வாத தோஷத்தை சமநிலையாக வைத்துக் கொள்ள உதவும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியை குறைக்க உதவும்.
பூண்டு பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள் வலுவான எலும்புகள் மற்றும் ஆரோக்கியமான உடலை பெற உதவுகின்றன. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் கொழுப்பை குறைக்கிறது.
குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. சரும பிரச்சனைகள் நீங்கி பளபளப்பான சருமத்தை பெறலாம்.
சளி மற்றும் இருமலுக்கும் நல்ல நிவாரணம் கொடுக்கும். கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல ஆரோக்கியமான உடலை பெற பூண்டு பாலை உங்கள் தினசரி உணவு முறையில் சேர்த்து பயன்பெறுங்கள்.