உடனடியாக எடையை குறைக்க செய்யும் டயட் பிளான் !





உடனடியாக எடையை குறைக்க செய்யும் டயட் பிளான் !

0

எடையை குறைக்கணும், அதுவும் வேகமாக குறைக்கணும். நல்லா சாப்பிடனும் ஆனா வெயிட் மட்டும் போடவே கூடாது. இது படிக்க வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

உடனடியாக எடையை குறைக்க செய்யும் டயட் பிளான் !
ஆனால் நடைமுறையில் சாத்தியம் கிடையாது. அப்படியே எடை வேகமாக குறையும் என்றால், அந்த திட்டத்தால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதை ஒன்றுக்கு பல முறை யோசித்த பின்னரே அதை பின்பற்ற வேண்டும்.

பொதுவாக பெண்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் 2-3 நாளைக்கு டயட், உடற்பயிற்சி என தீவிரமாக இருப்பார்கள். 

பின் குண்டாக இருப்பதும் அழகு தான் என்று தங்களை தேற்றிக் கொண்டு எடையை குறைக்கும் முயற்சியை கைவிட்டு விடுவார்கள். 

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வீட்டு வேலை, குழந்தைகள், தொழில் அல்லது அலுவலகம் என பல பொறுப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது தங்களுக்கான நேரத்தை ஒதுக்க முடியாமல் பல பெண்களும் சிரமப்படுகிறார்கள். 

நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணினால், இலக்கை அடையும் வரை ஒருபோதும் கை விடாதீர்கள். தொடர்ந்து டயட் மற்றும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் நிச்சயமாக சிறந்த பலன்களை காண முடியும். 

இதற்கு உதவக்கூடிய ஒரு எளிமையான டயட் பிளானை ஊட்டச்சத்து நிபுணரான இட்டு சாப்ரா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

முகத்தில் மங்கு இருக்கிறதா ? இதை ட்ரை பண்ணுங்க !

முதலில் உங்களுடைய தற்போதைய உடல் எடையிலிருந்து எவ்வளவு எடையை குறைக்க விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானியுங்கள். 

உங்கள் இலக்கை அடைய எத்தனை வாரம் அல்லது மாதங்கள் தேவைப்படும் என்பதை திட்டமிடுங்கள். உங்களுடைய இலக்குகள் அடையக்கூடியதாக இருக்க வேண்டும். 

குறிப்பாக ஆரம்ப காலத்தில் குறைவான இலக்கை வைத்து கொள்ளவும். உங்களுடைய முதல் இலக்கை அடையும் பொழுது உங்களுக்கு தன்னம்பிக்கையும், விடாமல் தொடர வேண்டும் என்ற எண்ணமும் வரும்.

சிறிய பகுதிகளாக உணவை எடுத்துக் கொள்ளுங்கள்

உடனடியாக எடையை குறைக்க செய்யும் டயட் பிளான் !

நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்த பின் ஒரே சமயத்தில் பலவிதமான உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதும் ஆபத்தானது. 

இதற்கு பதிலாக உணவுகளை சிறிய பகுதிகளாக குறிப்பிட்டு இடைவெளிகள் விட்டு எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.

உடல் எடையை குறைக்க டயட் பிளான்

காலையில் எழுந்தவுடன் - சோம்பு, வெந்தயம் தண்ணீர் அல்லது எலுமிச்சை தண்ணீர் ஒரு கிளாஸ் தண்ணீரில் சோம்பு மற்றும் வெந்தய விதைகளை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். 

இந்த நீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு பதிலாக வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.

ஏன் எடை தூக்கும் பயிற்சி முக்கியமானது?

காலை உணவு - பச்சை பயிறு தோசை

உடனடியாக எடையை குறைக்க செய்யும் டயட் பிளான் !

உங்களுடைய காலை உணவு புரதம் நிறைந்ததாக இருக்க வேண்டும். இதற்கு பாசிப்பருப்பு அல்லது பச்சை பயிறு போன்ற புரதம் நிறைந்த பருப்பு வகைகளை வைத்து தோசை செய்து சாப்பிடலாம். 

நீங்கள் விரும்பினால் இதில் சுரைக்காயையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த தோசைக்கு பதிலாக 2 இட்லியுடன், காய்கறிகள் சேர்த்த சாம்பாரையும் எடுத்துக் கொள்ளலாம்.

மதிய உணவு - ஓட்ஸ் சப்பாத்தி , காய்கறிகள் மற்றும் சாலட்

மதிய உணவிற்கு ஓட்ஸ் சப்பாத்தியுடன் ஒரு கப் காய்கறி மற்றும் சாலட் எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவுடன் ½ தயிர் சேர்த்துக் கொள்ள மறக்காதீர்கள்

இரவு உணவு - கிச்சடி / சப்பாத்தி + கலவை காய்கறிகள்

உடனடியாக எடையை குறைக்க செய்யும் டயட் பிளான் !

இரவு உணவை ஏழு மணிக்குள் சாப்பிட முயற்சி செய்யவும். அரை கப் சாலட் உடன் கிச்சடி அல்லது சப்பாத்தியை இரவு உணவிற்கு எடுத்துக் கொள்ளலாம். 

இதற்கு பதிலாக குயினோவா, பருப்பு மற்றும் காய்கறிகளை சேர்த்து சமைத்த கிச்சடியையும் இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

அப்பெண்டிக்ஸ் நோயின் அறிகுறியும் அதன் சிகிச்சை முறையும் !

மூன்று வேளை உணவின் இடைப்பட்ட நேரத்தில் கிரீன் டீ அல்லது மூலிகை டீயையும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)