சூட்டை தணிக்கும் நீர் மோர் செய்வது எப்படி?





சூட்டை தணிக்கும் நீர் மோர் செய்வது எப்படி?

0

தயிருடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி தயாரிக்கப் படுவது மோர். இது தயிரைக் காட்டிலும் அதிகப் பலன் தருகிறது. கோடை காலத்தில் எல்லா வீட்டிலும் மோர் கட்டாயம் இருக்க வேண்டும். 

சூட்டை தணிக்கும் நீர் மோர் செய்வது எப்படி?
இது உடலுக்கு குளிர்ச்சியையும், ஆற்றலையும் தருவது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. மோர் நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. 

வெயில் காலத்தில் உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கண்டிப்பாக மோர் அருந்த வேண்டும். இது விலையும் குறைவு தான். மோர் சத்துக்களின் களஞ்சியம் என்றால் மிகையல்ல. 

உப்பு, சர்க்கரை, புதினால ஆகியவை சேர்த்து மோர் குடித்தால் நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, உஷ்ணம் ஆகியவை தவிர்க்கப்படும். அதிக வெப்பத்தால் பல நேரங்களில் கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்படும். 

மோர் குடிப்பதால் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சி கிடைக்கும். இதனால் கண்களில் இருக்கும் எரியும் உணர்வு நீங்கும். கண்களுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும். சரி இனி தயிர் கொண்டு நீர் மோர் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையானவை . :

தயிர் - 1/2 கப்

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)

மல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)

இஞ்சி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)

பெருங்காயம் - சிறிதளவு

வெந்தயம் - 4 (விரும்புவர்கள் சேர்க்கலாம்)

பச்சை மிளகாய் - அரை மிளகாய் அளவு- 2 கப் மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)

தண்ணீர் - 1 ½ கப்

உப்பு - தேவையான அளவு

கோதுமையை அதிகம் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் !

செய்முறை . :

சூட்டை தணிக்கும் நீர் மோர் செய்வது எப்படி?

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பி விடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்து விடும். 

தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்து விடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

சுவையான இந்த நீர் மோரை டம்ளரில் ஊற்றிப் பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)