உடல் எடை குறைப்பிற்கு லெமன் காபி உதவுமா?





உடல் எடை குறைப்பிற்கு லெமன் காபி உதவுமா?

0

டிக்டாக்கில் #lemoncoffee என்ற ஹேஷ்டாக் 15 மில்லியன் பார்வை யாளர்களை எட்டியுள்ளது. லெமன் காபி குடிப்பதற்கு முன், குடித்ததற்கு பின் உள்ள மாற்றங்களை பாருங்கள் எனப் பலர் தங்கள் புகைப்படங்களை பகிர்வதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். 

உடல் எடை குறைப்பிற்கு லெமன் காபி உதவுமா?
உண்மையில் லெமன் காபி குடித்தால் உடல் எடை குறையுமா? பொதுவாக மனிதர்களின் பல பிரச்சினைகளில் ஒன்று உடல் எடை குறைப்பு தான். 

நவீன கால உணவுகளால் பொதுமக்கள் அதிக எடை, உடல் பருமன் என பல விஷயங்களை சந்திக்கின்றனர். இதில் இருந்து எப்படி டா வெளிவரலாம் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இப்படி பொதுமக்கள் நம்பும் வகையில் இணையத்தில் புகைப்படத்துன் சேர்ந்து பலரும் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க என பகிர்ந்து வருகின்றனர். அது என்ன என பார்க்கலாம்..

தினமும் சமூக ஊடகங்களில் வித்தியாசமான தலைப்புகளில் ஏதாவது ஒன்று டிரெண்டாகி தான் வருகிறது. 

லெமன் காபி குடித்தால் உடல் எடை மற்றும் தொப்பையை எளிதாக குறைக்கலாம் என்று கடந்த சில வருடங்களாகவே சமூக ஊடகங்களில் பேசப்படு வருகிறது. உண்மையிலேயே இது பலனைக் கொடுக்குமா?

சுவையான ஜவ்வரிசி உப்புமா செய்வது எப்படி?

உடல் எடை குறைப்பிற்கு காபி உதவுமா?

உண்மையில் காபி குடித்தால் உடல் எடை குறையுமா? கலோரி ஏதும் இல்லாத பிளாக் காபி சிறந்த டயட்களில் ஒன்றாக இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். 

இதிலுள்ள கஃபைன் நம் உடலில் உள்ள டோபமைனை தூண்டுவதால், உங்கள் உடல் நாள் முழுதும் புத்துணர்ச்சியாக இருக்கிறது. இதனால் தான் நம்மில் பலரும் காலையில் எழுந்ததும் காபி குடிக்கிறோம். 

ஆனால் இதன் முழு பலனும் கிடைக்க வேண்டுமென்றால் நாம் ஒரு நாளைக்கு குறைந்தது 4 முறை காபி அருந்த வேண்டும். அப்படி குடித்தால் உங்களுக்கு பதட்டம், நீரிழப்பு போன்றவை ஏற்படும். 

மேலும் இந்த கஃபைன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்கும் புத்துணர்ச்சி சிறிது நேரமே இருக்கும். அதனால் தான் எந்தவொரு மருத்துவரும் எடை குறைப்பிற்கு காபியை பரிந்துரைக்க மாட்டார்கள்.

தண்ணீரில் லெமன் கலந்து குடிப்பது உடல் எடையை குறைக்கும் என பலர் கூறுகின்றனர். ஏனென்றால் ஒருவர் வழக்கமாக சர்க்கரை கலந்த பானங்களை குடிப்பதற்கு பதிலாக தற்போது லெமன் கலந்த தண்ணீரை குடிக்கிறார். 

அதனால் தான் உடல் எடை குறைகிறது. வேறு எந்த விசேஷ காரனமும் இதில் இல்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

லெமன் காபி குடிப்பது ஆபத்தானதா?

நிச்சியமாக ஆபத்தில்லை. இருப்பினும் அதிகளவில் நாம் கஃபைனை எடுத்துக் கொள்ளும் போது தலைசுற்றல், படபடப்பு, வயிறு சம்மந்தமன பிரச்சனைகள், இதயதுடிப்பு அதிகரிப்பது, கவலை போன்றவை ஏற்படக் கூடும். 

கெமிக்கல் ஏதும் இல்லாத அற்புதமான ஷேவிங் க்ரீம் வீட்டிலேயே செய்ய !

மேலும் எலுமிச்சை சிட்ரஸ் வகையை சேர்ந்த்து என்பதால், இதை அதிகமாக உட்கொண்டால் நெஞ்செரிச்சலும் வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)