நீரிழிவு நோயாளிகள் இரவில் சாதம் சாப்பிடலாமா?





நீரிழிவு நோயாளிகள் இரவில் சாதம் சாப்பிடலாமா?

0

எந்த வகையான சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாதத்தை, பகல் நேரமோ இரவு நேரமோ சிறிய அளவில் உட்கொள்ளலாம். ஒவ்வொரு வேளையும் சமச் சீரான உணவைப் பராமரிப்பது முக்கியம். 

நீரிழிவு நோயாளிகள் இரவில் சாதம் சாப்பிடலாமா?
என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் போது அரிசி வகை முக்கியமானது. ஊட்டச்சத்து நிறைந்த சாதம் சாப்பிடுவது நல்லது. 

பிரவுன் அரிசி, காட்டு அரிசி மற்றும் நீண்ட தானிய வெள்ளை அரிசியான பஸ்மதி‌ போன்ற‌ அரிசிகளில் குறுகிய தானிய‌ அரிசியை விட அதிக நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. 

GI என்ற‌ சர்க்கரைச் சத்து குறியீடு மதிப்பெண்ணையும் சரி பார்க்க வேண்டும். குறுகிய தானிய வெள்ளை அரிசியில் அதிக ஜிஐ உள்ளது, அதாவது 70 அல்லது அதற்கும் அதிகமாக உள்ளது. 

(getCard) #type=(post) #title=(You might Like)

எனவே முடிந்த வரை அதை தவிர்க்க வேண்டும். மற்ற வகை அரிசி மற்றும் மாவுச் சத்துக்களுடன் ஒப்பிடும் போது இதில் குறைவான ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. 

பாசுமதி, பழுப்பு அரிசி மற்றும் காட்டுயானம் அரிசி ஆகியவை மிதமான வரம்பில் ஜிஐ மதிப்பெண்களைக் கொண்டுள்ளன. இவற்றின் ஜிஐ 56 முதல் 69 வரை உள்ளது. 

இவற்றை பொதுவாக அளவோடு சாப்பிடுவது நல்லது. சமையல் நேரம் கூட GI மதிப்பை மாற்றலாம், எனவே அதிக நேரம் சமைத்து குழைய வைக்காமல் கவனமாக இருங்கள்.

சாப்பாடு தட்டில் அரை பங்கு மாவுச்சத்து இல்லாத‌ பச்சைக் காய்கறிகள், கால் பாகம் புரதம் உள்ள பொருள்- (தயிர், முட்டை பருப்பு, சுண்டல், மீன்), கால் பாகம் மட்டுமே சாதம் என்று வழக்கப் படுத்திக் கொள்வது நல்லது. 

குறைந்த ஜிஐ உணவுகளுடன், சிறு அளவு சாதம் மட்டுமே சாப்பிடுவதை உறுதிப் படுத்திக் கொண்டால் இரவிலும் சாதம் சாப்பிடலாம். சிலர் சப்பாத்தி சாப்பிட்டால் எனக்கு வயிற்று வலி வருகிறது. 

நீரிழிவு நோயாளிகள் இரவில் சாதம் சாப்பிடலாமா?

ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்வார்கள். ஆனால் இவர்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். 

இரவு நேரத்தில் சாதத்தை எடுத்து கொண்டால் நீங்கள் மாத்திரையின் அளவை கூடுதலாக எடுத்து கொள்ள வேண்டும். மாத்திரைகள் அளவு கூடும் போது சேமித்து வைக்கப்பட்ட இன்சுலின் அளவு குறைந்து விடும்.

மெலஸ்மா என்ற தோல் கோளாறை குணப்படுத்தும் எளிய வீட்டு வைத்தியங்கள் !

அதனால் இரவில் சாப்பிடும் சாதம் தான் உங்கள் உடலுக்கு ஏற்றது என்று நினைத்தால் சரியான முறையில் சரியான அரிசியை (கைக்குத்தல்) ஒரே அளவில் எடுத்து கொண்டு அதற்கேற்ப மருந்துகளின் அளவை கூட்டி கொள்ள வேண்டும். 

எனவே நீங்கள் உணவை பின்வருமாறு அமைத்து கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)