பிரியாணி இலைக்கு ஏதேனும் மருத்துவ குணங்கள் உள்ளதா?

பிரியாணி இலைக்கு ஏதேனும் மருத்துவ குணங்கள் உள்ளதா?

0
மத்திய தரைக்கடல் பகுதியை தாயகமாகக் கொண்ட லாரல் மரத்தின் இலை தான் பிரிஞ்சி இலை. இந்த பிரிஞ்சி இலைக்கு தமாலப்பத்திரி, இலவங்க பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை என வேறு பல பெயர்களும் உண்டு.
பிரியாணி இலைக்கு ஏதேனும் மருத்துவ குணங்கள் உள்ளதா?
மசாலா பொருட்களின் சுவையைக் கூட்டும் பொருளாக பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகிறது .இந்த பிரிஞ்சி இலை, உணவுகள் நறுமணமாகவும் சுவையாகவும் இருக்க காரணமாக விளங்குகிறது.

உணவின் சுவைக்காக மட்டுமே இந்த இலையின் வாசம் என்று நினைக்கிறோம். 

ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் பல பிரச்சனை களையும் தீர்க்க வல்ல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது இந்த பிரியாணி இலை.
சத்துக்கள்

இந்த பிரிஞ்சி இலையில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச் சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனிஸ், செலினியம் மற்றும் இரும்பு சத்து போன்றவை நிறைந்துள்ளன.

மருத்துவ குணங்கள்

பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி செரிமான பிரச்சனை வராமல் தடுக்கிறது .இந்த இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் மலச்சிக்கல் மற்றும் குடல் இயக்க பிரச்சனைகள் குணமாகும்.
டைப்-2 நீரிழிவிற்கு பிரியாணி இலை சிறந்த பலனளிக்கிறது. இயற்கையாகவே இதிலிருக்கும் பாலிஃபீனால் எனப்படும் செயலில் உள்ள சேர்மங்கள், குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

எனவே, நீரழிவு நோய்க்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் தங்கள் உணவில் பிரியாணி நிலையை சேர்ப்பது சர்க்கரை அளவை வெகுவாக குறைத்து விடும்.

பிரியாணி இலை, சமையலின் சுவைக்காக, வாசனைக்காக மட்டுமின்றி முடியின் ஆரோக்கியம், அழகு குறிப்புக்கும் பயன்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியவை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன.

பிரியாணி இலையை வேக வைத்து இந்த தண்ணீர் நன்கு ஆறியதும் தலையை கழுவினால் முடி உதிர்வது நிற்கும்.
ருசியான சேலம் மட்டன் குழம்பு செய்வது எப்படி?
மேலும் தலையில் பொடுகு, அரிப்பு போன்றவை இருந்தால் பிரியாணி இலையை கொதிக்க வைத்த நீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து வந்தால் இந்த பிரச்சனை தீரும்.

பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை சருமத்தில் எரிச்சல் உள்ளவர்கள் கழுவிவினால் எரிச்சல் போகும். இதே போல் இதற்கு விஷத்தை முறிக்கும் தன்மையும் இருப்பதால் பாம்பு கடிக்கும் மருந்தாகிறது.
பிரியாணி இலைக்கு ஏதேனும் மருத்துவ குணங்கள் உள்ளதா?
பிரியாணி இலையில் இருக்கும் ஆன்டி பாக்டீரியாக்கள் கிருமி தாக்கத்தி லிருந்து பாதுகாக்கும். சிறுநீரகப் பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க பிரியாணி இலை பெரிதும் உதவுகிறது. 

இதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும். இந்த பிரிஞ்சி இலையை வெறுமனே சாப்பிட்டால் அது முழுமையாக ஜீரணமாகாது. 

கர்ப்ப காலம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பிரியாணி இலையின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். 
பிரியாணி இலை சூடான ஆற்றலை கொண்டிருப்பதால் கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் உடல்நல பிரச்சினைகளை தூண்டலாம். 

மேலும் கர்ப்ப காலத்தில் இதை சேர்ப்பதால் வயிற்று கோளாறு, வியர்வை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)