சுவையான ஸ்வீட் பப்ஸ் செய்வது எப்படி?





சுவையான ஸ்வீட் பப்ஸ் செய்வது எப்படி?

0
வெண்ணை போல் வாயில் போட்டவுடன் உருகும் இனிப்பு பப்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகை தான் இந்த இனிப்பு பப்ஸ். 
சுவையான ஸ்வீட் பப்ஸ் செய்வது எப்படி?
மிக விரைவாக இதனை இனிப்பு முடியும் என்பதால் பெரும்பாலான இல்லத்தரசிகளின் விருப்பமாக உள்ளது. 

தேநீர் நேர சிற்றுண்டியாக நீங்கள் ஏதாவது இனிப்பு சாப்பிட விரும்பினால், இந்த எளிய மற்றும் சுவையான சிற்றுண்டியை முயற்சிக்கவும். 

இனிப்பு பஃப் மிகவும் லேசானது, அவை உங்கள் வாயில் உருகி, புத்துணர்ச்சி யூட்டுகின்றன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பப்ஸ் விரும்பி உண்பர்.
 
அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

அதனால் இன்று இந்த சுவையான இனிப்பு பப்ஸ் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் : .
 
மைதா மாவு - 150 கிராம்
 
துருவிய தேங்காய் - 1 cup
 
சர்க்கரை - 50 கிராம்
 
ஏலக்காய் - 6
 
நெய் - 3 tbsp
 
எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை : .
சுவையான ஸ்வீட் பப்ஸ் செய்வது எப்படி?
இனிப்பு பப்ஸ் செய்ய மைதாமாவில் சிறிது நெய் விட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்குப் பிசைவது போல் தண்ணீர் வேண்டும். சிறிய உருண்டைகளாகச் செய்து வைத்துக் கொள்ளவும். 

தேங்காயைத் துருவிச் சர்க்கரையும் ஏலக்காயும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

உருண்டைகளாகச் சப்பாத்தி இடுவது போல் வட்டமாக இட்டுக் கொண்டு நடுவில் இனிப்பை வைத்து பப்ஸ் செய்யும் அச்சால் வடிவம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
பிறகு நெய்யைக் காய வைத்து ஒவ்வொன்றாகப் போட்டு வேக வைத்து எடுக்கவும். பிறகு அடுக்கி வைக்கும் பொழுது ஒவ்வொன்றின் மேலும் வண்ணத் தேங்காய்ப் பூவைத் தூவி வைத்தால் அழகாக இருக்கும். 

சுவையான இனிப்பு பப்ஸ் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)